dcsimg

மஞ்சள் நெற்றி மரங்கொத்தி ( тамилски )

добавил wikipedia emerging languages

மஞ்சள் நெற்றி மரங்கொத்தி (Yellow-fronted Pied Woodpecker) இந்திய துணைகண்டத்தில் காணப்படும் ஒரு மரங்கொத்தியாகும்.

பெயர்கள்

தமிழில் :மஞ்சள் நெற்றி மரங்கொத்தி

ஆங்கிலப்பெயர் :Yellow-fronted Pied Woodpecker Yellow-crowned woodpecker

அறிவியல் பெயர் :Dendrocopos mahrattenis

உடலமைப்பு

18 செ.மீ. - குங்குமச் சிவப்பான உச்சிக் கொண்டையையும் மஞ்சள் நெற்றியையும் உடைய பழுப்பு நிறம் தோய்ந்த இதன் கருப்பு உடலில் வெள்ளைத் திட்டுக்கள் ஒழுங்கின்றிக் காணப்படும். மோவாய், தொண்டை, முன்கழுத்து ஆகியன வெண்மை; மார்பும் வயிறும் செம்மஞ்சளாகப் பழுப்புக் கீற்றுக்களுடன் காணப்படும். அடிவயிறு பளிச்சென்று குங்குமச் சிவப்பு நிறமாக இருக்கும்.

காணப்படும் பகுதிகள் ,உணவு

தமிழ்நாட்டில் கிழக்குக் கடற்கரை சார்ந்த கரை ஓரப் பகுதிகள் தவிர எங்கும் ஓரளவு தாராளமாகக் காணக் கூடியது. கள்ளிப் புதர்கள், சாலை ஓர மரங்கள் கருவைக் காடுகள், மாந்தோப்புகள் ஆகியவற்றில் திரியும். இது பசுமைமாறாக் காடுகளை விரும்புவதில்லை. புழு பூச்சிகளைத் தேடி உண்ணும் பறவைகளின் கூட்டத்தோடு கலந்து மரத்துக்கு மரம் தாவி பட்டைகளை அலகால் தட்டி, வெளிவரும் பூச்சிகளையும் அதன் முட்டைகளையும் பிடித்துத் தின்னும். கிளிக் கிளிக் என கீச்சுக் குரலில் கத்தும். [2]

இனப்பெருக்கம்

பிப்ரவரி முதல் மே வரை மா வன்னி நுழைவாயிலுள்ள வங்கு குடைந்து 3 முட்டைகள் இடும்.

படங்கள்

மேற்கோள்கள்

  1. "மஞ்சள் நெற்றி மரங்கொத்தி". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2016.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2016). பார்த்த நாள் 2 April 2017.
  2. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:96
лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages

மஞ்சள் நெற்றி மரங்கொத்தி: Brief Summary ( тамилски )

добавил wikipedia emerging languages

மஞ்சள் நெற்றி மரங்கொத்தி (Yellow-fronted Pied Woodpecker) இந்திய துணைகண்டத்தில் காணப்படும் ஒரு மரங்கொத்தியாகும்.

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages