மோதிர வளையன் அல்லது வக்கணத்தி (Elaphe helena) என்பது ஒரு நஞ்சில்லா பாம்பு இனமாகும். இது தெற்கு ஆசியா, மத்திய ஆசியா பகுதிகளில் காணப்படுகிறது.
இப்பாம்பு இலங்கை, தென் இந்தியா , பாக்கித்தான் ( சிந்து ), நேபாளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.
இப்பாம்புகள் வழவழப்பான, மென்மையான செதில்களுடன் மஞ்சள் கலந்த பழுப்பும், சாகலைட் கலந்த பழுப்பும் கொண்டு இருக்கும். உடலின் முன்புறம் இரண்டு மங்கிய கோடுகளும், கட்டம்கட்டமான அமைப்பும் இருக்கும். இவ்விரு கோடுகளும் சற்று பின்சென்று மையப்பகுதியல் ஒன்று சேரும். பின்புறம் இரு கரிய கோடுகளும் இருக்கும் தலை நீண்டு இருக்கும் கண்கள் பெரியதாக உருண்டு இருக்கும். வயிற்றின் அடிப்பகுதி வெள்ளையாக இருககும்.
வளர்ந்த பெரிய பாம்புகள் 10 அங்குல (25 செ.மீ) வாலுடன் 4.5 அடி (1.4 மீ), மொத்த நீளம் உடையவை.[1]
இப்பாம்புகள் காடுகள், விளைநிலங்கள் போன்ற இடங்களில் உள்ள பழைய மரங்கள், மரக் குவியல், பழைய வீடுகள், அடர்ந்த தாவரங்கள் போன்ற இடங்களில் இருக்க விரும்பும்.
இப்பாம்பு கொறித்துண்ணிகள் , மற்ற சிறிய பாலூட்டிகள், பல்லிகள், ஆகியவற்றை உணவாக கொள்கிறது.
இப்பாம்புகள் இரவும் பகலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். பொதுவாக அமைதியாக காணப்பட்டாலும் தாக்குபவனைக் கண்டால் வாயைப் பிளந்து பினநோக்கி எழும்பி கடிக்க முற்படும். இந்த இனங்களுள் ஆண்பாம்புகள் பொதுவாக பெண்களை விட மிக வன்மையாக உள்ளன. இதன் கடி காரணமாக பற்களால் நல்ல காயம் ஏற்படும்.
மோதிர வளையன் அல்லது வக்கணத்தி (Elaphe helena) என்பது ஒரு நஞ்சில்லா பாம்பு இனமாகும். இது தெற்கு ஆசியா, மத்திய ஆசியா பகுதிகளில் காணப்படுகிறது.