dcsimg
原綠球藻的圖片

原綠球藻

Prochlorococcus marinus

புரோக்குளோரோக்காக்கசு ( 坦米爾語 )

由wikipedia emerging languages提供

புரோக்குளோரோக்காக்கசு என்பது மிகவும் நுண்ணிய, 0.6 மைக்ரோமீட்டர் அளவே உள்ள, வித்தியாசமான கடல்வாழ் கோளவுயிரி ஆகும். இதுவே அநேகமாக உலகில் அதிகமாகக் காணப்படும் ஒளிச்சேர்க்கை உயிரியாக இருக்கலாம்.

புரோக்குளோரோக்காக்கசு முதன்முதலில் 1986ல் கண்டுபிடிக்கப்பட்டது. மாசச்சூசட்சு நுட்பியல் கழகத்தின் சேல்லி (பென்னி) சிசோல்ம் என்பவராலும், வுட்சு ஹோல் ஓசனோகிராபிக் கழகத்தின் ராபர்ட்டு ஜே. ஓல்சன் என்பவராலும், அவர்களுடைய கூட்டுழைப்பாளர்களாலும் சர்காசோக் கடலில் இவ்வுயிரி கண்டுபிடிக்கப்பட்டது. [1]

இவையே இதுவரை அறியப்பட்டதிலேயே மிகவும் சிறிய அளவிலான ஒளிச்சேர்க்கை உயிரிகளாகும். இவற்றின் நீளம் 0.5 முதல் 0.8 மைக்ரோமீட்டர் அளவே இருக்கும். ஒற்றை மில்லி லிட்டர் கடல்நீரில் ஒரு லட்சம் செல்களுக்கும் மேலே இருக்கும். உலகிலேயே மிகவும் அதிகமாகக் காணப்படும் உயிரினம் இதுவாகத் தான் இருக்கும்.

புரோக்குளோரோக்காக்கசின் ஒளிச்சேர்க்கும் பொருள் தனித்தன்மை வாய்ந்தது. 1986க்கும் முன்னர் இவற்றை உலகம் அறிந்திருக்கவில்லை என்றாலும், உலக ஆக்சிஜன் அளவில் ஏறத்தாழ 20 விழுக்காடுக்கு இவையே காரணம் என்று நம்பப்படுகிறது.

உசாத்துணைகள்

  1. S. W. Chisholm, R. J. Olson, E. R. Zettler, J. Waterbury, R. Goericke & N. Welschmeyer (1988). "A novel free-living prochlorophyte occurs at high cell concentrations in the oceanic euphotic zone". Nature 334: 340–343.

許可
cc-by-sa-3.0
版權
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
原始內容
參訪來源
合作夥伴網站
wikipedia emerging languages

புரோக்குளோரோக்காக்கசு: Brief Summary ( 坦米爾語 )

由wikipedia emerging languages提供

புரோக்குளோரோக்காக்கசு என்பது மிகவும் நுண்ணிய, 0.6 மைக்ரோமீட்டர் அளவே உள்ள, வித்தியாசமான கடல்வாழ் கோளவுயிரி ஆகும். இதுவே அநேகமாக உலகில் அதிகமாகக் காணப்படும் ஒளிச்சேர்க்கை உயிரியாக இருக்கலாம்.

புரோக்குளோரோக்காக்கசு முதன்முதலில் 1986ல் கண்டுபிடிக்கப்பட்டது. மாசச்சூசட்சு நுட்பியல் கழகத்தின் சேல்லி (பென்னி) சிசோல்ம் என்பவராலும், வுட்சு ஹோல் ஓசனோகிராபிக் கழகத்தின் ராபர்ட்டு ஜே. ஓல்சன் என்பவராலும், அவர்களுடைய கூட்டுழைப்பாளர்களாலும் சர்காசோக் கடலில் இவ்வுயிரி கண்டுபிடிக்கப்பட்டது.