dcsimg
Life » » Archaeplastida » » 水龍骨綱 » » 桫欏科 »

Alsophila glabra (Bl.) Hook.

சையாத்தியா கிளாபரா ( 坦米爾語 )

由wikipedia emerging languages提供

சையாத்தியா கிளாபரா (Cyathea glabra) மரப்பெரணி வகையைச் சார்ந்தது. இது போர்னியோ, மேற்கு ஜாவா, சுமத்திரா மற்றும் மலாய் தீபகற்பப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது.

ஈரப்பதம் நிறைந்த காட்டுப்பகுதிகளில் ஆயிரத்து ஐநுாறு மீட்டர் உயரத்தில் வளரக்கூடியது. இதன் தண்டுப்பகுதியானது நேராகவும், 2மீ முதல் 4மீ வரை உயரமுடையதாகவும் காணப்படுகிறது. இப்பெரணியின் இலைகளானது, இரட்டை மற்றும் மூன்று அடுக்கைக் கொண்டதாகவும் 1 முதல் 2 மீ நீளம் கொண்டதாகவும் உள்ளது. தனித்துவமாக அடி இலைகள் வடிவத்தில் குறிப்பிடத்தக்க அளவு குறுக்கமடைந்து காணப்படுகிறது. இலைக்காம்புப் பகுதி கருநிறத்திலும், அடிப்பகுதியில் செதில்கள் கொண்டதாகவும் அமைந்துள்ளது. செதில்கள் அடர் நிறத்தைக் கொண்டு, பளபளப்பாகவும், வெளுத்த ஓரங்கைளயும், நொறுங்கக்கூடிய விளிம்புகைளயும் கொண்டதாக உள்ளன. சோரையானது ஒன்று முதல் மூன்று வரையிலான தொகுதிகளாக வளமான சிற்றிலை நரம்புகளில் உருவாக்கப்படுகின்றன. சோரைகள் உறைகளைப் பெற்றிருக்கவில்லை.

சையத்தியா கிளாபரா சையாத்தியா சைசாண்டியா, சையாத்தியா போடோபில்லா சையாத்தியா சப்டியுபியா ஆகிய பெரணி வகைகளுக்கிடையேயான தொடா்பினைத் தொிந்து கொள்ள மேலும் ஆராய்ச்சிகள் தொடரப்பட வேண்டும் என்று தாவரவியலாளர்கள் லார்ஜ் மற்றும் பிராக்கின்சு (2004) தெரிவிக்கின்றனர்.

மேற்கோள்கள்

許可
cc-by-sa-3.0
版權
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
原始內容
參訪來源
合作夥伴網站
wikipedia emerging languages

சையாத்தியா கிளாபரா: Brief Summary ( 坦米爾語 )