dcsimg
黃葛树的圖片
Life » » Archaeplastida » » 木蘭綱 » » 桑科 »

黃葛树

Ficus virens W. T. Aiton

குருகிலை ( 坦米爾語 )

由wikipedia emerging languages提供

குருகிலை (Ficus virens) என்பது அத்தி இன மரமாகும். இது இந்திய, தென்னாசியா, மலேசியா, வட அவுத்திரேலியா வரை காணப்படுகிறது. [1]

குருகிலையின் தன்மைகள்

மழை பொழியும் இடி முழக்கத்தால் குருகிலை தளிர்க்கும். [2] [3]
குருகிலை என்னும் பூ மகளிர் புன்னகை பூப்பது போல வெண்மையாகப் பூக்கும். [4]
வானம் இடி முழங்குகிறது; முருகன் திருவிழா முழக்கம் போல முழங்குகிறது. காடெல்லாம் குருகிலைப் பூ பூத்துக் குலுங்குகிறது. இவ்வாறு தலைவி கூறுகிறாள். [5]
குருகு போல வெண்ணிறத்தில் பூக்கும் பூ குருகிலை [6]

குருகு (மலை)

குருகு பெயரிய குன்றம் என்பது கிரவுஞ்ச மலை. முருகன் குருகுமலையை வேலெறிந்து பிளந்தார் என்பது புராணக்கதை.

மேற்கோள்

  1. குருகிலை * குருகிலை
  2. பெய்ய முழங்கத் தளிர்க்கும், குருகிலை (நான்மணிக் கடிகை)
  3. அருளி அதிரக் குருகிலை பூப்ப (திணைமொழி ஐம்பது பாடல் 30)
  4. அஞ்சனக் காயா மலரக் குருகிலை
    ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத்
    தண்கழற் கோடல் துடுப்(பு)ஈனக் காதலர்
    வந்தார் திகழ்நின் தோள். (திணைமொழி ஐம்பது பாடல் 21)

  5. முருகியம் போல் வானம் முழங்கி இரங்க,
    குருகிலை பூத்தன கானம்; பிரிவு எண்ணி,
    'உள்ளாது அகன்றார்' என்று ஊடி யாம் பாராட்ட,
    பள்ளியுள் பாயும், பசப்பு. (கார்நாற்பது பாடல் 27)

  6. குறிஞ்சிப்பாட்டு - பாடல் அடி 73

மேலும் பார்க்கவும்

許可
cc-by-sa-3.0
版權
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
原始內容
參訪來源
合作夥伴網站
wikipedia emerging languages

குருகிலை: Brief Summary ( 坦米爾語 )

由wikipedia emerging languages提供

குருகிலை (Ficus virens) என்பது அத்தி இன மரமாகும். இது இந்திய, தென்னாசியா, மலேசியா, வட அவுத்திரேலியா வரை காணப்படுகிறது.

許可
cc-by-sa-3.0
版權
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
原始內容
參訪來源
合作夥伴網站
wikipedia emerging languages