நாயுருவி அல்லது அபமார்க்கி (தாவரவியல் பெயர்; அசய்ரந்தெஸ் அஸ்பெர (Achyranthes aspera) என்பதாகும். ஒரு மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வரை நிமிர்ந்து வளரும் இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.இதன் நெற்று விலங்குகளின் மேல் ஒட்டிச் சென்று வேறு இடங்களில் பரவும்.
நாயுருவிக்கு அபமார்க்கி, நாய்க்குருவி, சரமஞ்சரி, சனம், சுவானம், சேகரி, மாமுனி போன்ற வேறு பெயர்கள் உள்ளன. இவற்றின் விதைகள் (அரிசி) கொண்ட சிறு நெற் கதிர் போல காணப்படுவதால் கதிரி என அழைக்கப்படுகிறது. நாட்டினத்தைக் குறிக்க ‘நாய்’ எனும் பெயர் பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகள் தாவரத்திலிருந்து ‘உருவி’ உடலில் ஒட்டிக்கொள்வதால், ‘நாயுருவி’ என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம்.[1] மேலும் இதற்கு கஞ்சரி. சிகிசிரம், கதிரி, கரமஞ்சரி, சிறுகடலாடி, சகரிகம், கொட்டாவி, நாயரஞ்சி போன்ற வேறு பெயர்களும் உள்ளதாக கூறப்படுகிறது.
நாயுருவியானது சிறுசெடி வகையைச் சார்ந்தது. இதன் இலைகளில் மென்மையான ரோம வளரிகளோடு, தலைகீழ் முட்டை வடிவத்தில் காணப்படும். இலைகளும் தண்டும் சிவந்து காணப்படுவது செந்நாயுருவி வகையாகும். இந்தத் தாவரமானது பீட்டா கரோடீன் (Beta-Carotene), வைட்டமின் – சி, கால்சியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இவ்விரு வகைளிலும் செந்நாயுருவி சிறப்புடைது.