வெட்சி (இட்டிலிப் பூ) என்பது ரூபியேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். என்றும் பசுமையான மலர்ச்செடிகளான ரூபியேசியே குடும்பத்தில் 529 சிற்றினங்கள் காணப்படுகின்றன.[2]
உலகெங்கிலுமுள்ள அயன மண்டலம், உப அயன மண்டல நாடுகளில் தோன்றினாலும் அயன மண்டல் ஆசியா, குறிப்பாக இந்தியா இதன் பல்வகைமை செறிந்து காணப்படும் நாடாகும்.[2] இப்போது ஐக்கிய அமெரிக்கா நாடுகளிலும் வெட்சி வளர்க்கப்படுகிறது.
இத்தாவரம் 3-6 அங்குலம் நீளமுள்ள தோல் போன்ற இலையையும் சிறு பூக்களின் கொத்துக்களால் ஆனது. அமில மண்ணுக்கு பொருத்தமான இத்தாவரம் பொன்சாய் செய்கைக்கு ஏற்றது.
வெட்சி என்பது ஒருவகைக் காட்டுப்பூ.
இக்காலத்தில் அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது.
இது ஊசி போல் அரும்பு விடும்.
வெண்ணிற வெட்சி அதியமானின் குடிப்பூ.
செந்நிற வெட்சி போருக்குச் செல்வோர் சூடும் பூ. முருகனை வழிபடுவோரும் அவன் நிறமான செந்நிற வெட்சிப்பூவை அணிந்துகொள்வர்.
வெட்சி (இட்டிலிப் பூ) என்பது ரூபியேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். என்றும் பசுமையான மலர்ச்செடிகளான ரூபியேசியே குடும்பத்தில் 529 சிற்றினங்கள் காணப்படுகின்றன.
உலகெங்கிலுமுள்ள அயன மண்டலம், உப அயன மண்டல நாடுகளில் தோன்றினாலும் அயன மண்டல் ஆசியா, குறிப்பாக இந்தியா இதன் பல்வகைமை செறிந்து காணப்படும் நாடாகும். இப்போது ஐக்கிய அமெரிக்கா நாடுகளிலும் வெட்சி வளர்க்கப்படுகிறது.
இத்தாவரம் 3-6 அங்குலம் நீளமுள்ள தோல் போன்ற இலையையும் சிறு பூக்களின் கொத்துக்களால் ஆனது. அமில மண்ணுக்கு பொருத்தமான இத்தாவரம் பொன்சாய் செய்கைக்கு ஏற்றது.