dcsimg

புலிச்சுறா ( tamil )

fornì da wikipedia emerging languages

புலிச்சுறா (Galeocerdo cuvier[1]) என்பது கடிலில் வாழக்கூடிய மீன் இனங்களில் ஒன்றாகும். கலியோசெர்தோ (வழுவன்சுறா) பேரினத்தில் எஞ்சியிருக்கக்கூடிய ஒரே சுறா இனம் இதுவாகும். பொதுவாக “கடல் புலி” என்று அழைக்கப்படுகிறது. ஒப்பீட்டளவில் பெரிய கொன்றுண்ணியான இந்தப் புலிச்சுறா 5 மீட்டர் (16 அடி 5 அங்குலம்) வரை வளரக்கூடியது. இது பல மிதவெப்பமண்டலம் மற்றும் வெப்ப மண்டல நீரில், குறிப்பாக மத்திய பசுபிக் தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுவாகக் காணப்படுகிறது. இதன் உடலில் காணப்படும் ஆழ்ந்த கோடுகள் புலியின் தோலினைப் போல ஒத்திருப்பதால் இது புலிச்சுறா என அழைக்கப்படுகிறது. இந்த ஆழ்கோடுகள் சுறா முதிர்ச்சியடைந்த பின் மங்கி விடும் [2].

உணவு முறை

புலி சுறா தனித்தன்மையானது. பெரும்பாலும் இரவுநேரத்தில் வேட்டையாடும். மேலும் மற்ற வகைச் சுறாக்களின் பரவலான உணவு வகைகளையும் கொண்டிருப்பதோடு குறிப்பிடத்தக்கது,இறால் போன்ற ஓடுடைய கடல் இனங்கள், மீன், முத்திரைகள், பறவைகள், கணவாய் மீன்கள், ஆமைகள், மற்றும் கடல் பாம்புகள் ஆகியவற்றிலிருந்து டால்பின்களுக்கும் மற்ற சிறு சுறாக்கள் வரையிலான கடல் உயிரினங்களை உணவாக்கி கொள்கின்றன. அதுமட்டுமல்லாமல் உண்ணவியலாத மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை பொருட்களான வண்டிச் சக்கரத்திலுள்ள உருளிப்பட்டை உள்ளிட்ட குப்பைப் பொருட்களை கடித்து உண்டு விடுகின்றன. எனவே இவற்றுக்கு குப்பைத்தின்னி என்ற பெயரும் உள்ளது[3]. இவை உணவுச் சங்கிலியில் முதலாவதாக இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் கொலை காரத் திமிங்கலங்களால் கொல்லப்படலாம்[4]. இதன் ஒற்றைத் துடுப்பிற்காக வேட்டையாடுபவர்கள் மற்றும் மீன் பிடிப்பவர்களாலும் புலிச்சுறா அடிக்கடி ஆபத்துகளைச் சந்திக்கிறது.

உள்ளமைப்பியல்

பற்கள்

 src=
இரை உணவின் சதையை வெட்டி அறுக்கும் வகையிலமைந்த புலி சுறாவின் அரம்ப முனை பற்கள்

புலிச்சுறாவில் இரையுணவை பற்றிக்கொள்ள கூரான கீழ்வரிசைப் பற்களும் அதன் சதைகளைக் கிழிக்க முக்கோண வடிவ அரம்ப முனை மேல் வரிசைப் பற்களும் காணப்படுகின்றன

மேற்கோள்கள்

licensa
cc-by-sa-3.0
drit d'autor
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

புலிச்சுறா: Brief Summary ( tamil )

fornì da wikipedia emerging languages

புலிச்சுறா (Galeocerdo cuvier) என்பது கடிலில் வாழக்கூடிய மீன் இனங்களில் ஒன்றாகும். கலியோசெர்தோ (வழுவன்சுறா) பேரினத்தில் எஞ்சியிருக்கக்கூடிய ஒரே சுறா இனம் இதுவாகும். பொதுவாக “கடல் புலி” என்று அழைக்கப்படுகிறது. ஒப்பீட்டளவில் பெரிய கொன்றுண்ணியான இந்தப் புலிச்சுறா 5 மீட்டர் (16 அடி 5 அங்குலம்) வரை வளரக்கூடியது. இது பல மிதவெப்பமண்டலம் மற்றும் வெப்ப மண்டல நீரில், குறிப்பாக மத்திய பசுபிக் தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுவாகக் காணப்படுகிறது. இதன் உடலில் காணப்படும் ஆழ்ந்த கோடுகள் புலியின் தோலினைப் போல ஒத்திருப்பதால் இது புலிச்சுறா என அழைக்கப்படுகிறது. இந்த ஆழ்கோடுகள் சுறா முதிர்ச்சியடைந்த பின் மங்கி விடும் .

licensa
cc-by-sa-3.0
drit d'autor
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்