சாம்பல்தலை ஆலா[2] (lesser noddy (Anous tenuirostris, also known as the sooty noddy), என்பது நீள் சிறகு கடற்பறவை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கடற்பறவை ஆகும். இப்பறவையானது கொமொரோசு, கென்யா, லைபீரியா, இந்தியா, மாலைத்தீவுகள், மொரிசியசு, சீசெல்சு, இலங்கை and ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் கடல்சார்ந்த பகுதிகளில் காணப்படுகிறது.
சாம்பல்தலை ஆலாவானது ஒரு காலத்தில் கருந்தலை ஆலாவின் (Anous minutus) துணையினமாக கருதப்பட்டது.[3] 2016 ஆம் ஆண்டு வெளியாற மூலக்கூறு பைலோஜெனிக் ஆய்வின் மூலம் இரண்டு இனங்களுக்கிடையிலான நெருங்கிய உறவு உறுதிப்படுத்தப்பட்டது.[4]
சாம்பல்தலை ஆலா பறவையானது 30–34 செ.மீ (12–13 அங்குலம்) நீளம் கொண்டது. இதன் இறகானது 58–63 செமீ (23–25 அங்குலம்) என்ற அளவிலும், 97–120 கிலோ என்ற எடையை உடையதாக இருக்கும். இதன் சிறகுகளானது பழுப்புகலந்த கரிய நிறம் கொண்டது. இதன் நெற்றி மற்றும் தலை உச்சியானது மங்கிய நிறம் கொண்டு இருக்கும். இதன் அலகானது கரிய நிறத்தில் உளி போன்று காணப்படும்.
சாம்பல்தலை ஆலா (lesser noddy (Anous tenuirostris, also known as the sooty noddy), என்பது நீள் சிறகு கடற்பறவை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கடற்பறவை ஆகும். இப்பறவையானது கொமொரோசு, கென்யா, லைபீரியா, இந்தியா, மாலைத்தீவுகள், மொரிசியசு, சீசெல்சு, இலங்கை and ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் கடல்சார்ந்த பகுதிகளில் காணப்படுகிறது.
சாம்பல்தலை ஆலாவானது ஒரு காலத்தில் கருந்தலை ஆலாவின் (Anous minutus) துணையினமாக கருதப்பட்டது. 2016 ஆம் ஆண்டு வெளியாற மூலக்கூறு பைலோஜெனிக் ஆய்வின் மூலம் இரண்டு இனங்களுக்கிடையிலான நெருங்கிய உறவு உறுதிப்படுத்தப்பட்டது.