நிலைக்கருவிலி (Prokaryote) என்பது மரபணு அல்லது பாரம்பரியப் பொருட்களை உள்ளடக்கிய, கருமென்சவ்வால் சூழப்பட்ட நிலையான கருவையோ, அல்லது மென்சவ்வால் மூடப்பட்ட வேறு புன்னங்கங்களையோ கொண்டிராத உயிரினங்கள் ஆகும். இவற்றில் அனேகமானவை ஒரு உயிரணுவால் (அல்லது கலத்தால்) ஆன உயிரினங்கள் ஆகும். ஆனாலும் Myxobacteria போன்ற சில நிலைக்கருவிலிகளின் வாழ்க்கை வட்டத்தில் பல்கல நிலையும் வருகின்றது. ஆங்கிலச் சொல்லான புரோகார்யோட்டு (Prokaryote) என்பது மென்சவ்வால் சூழப்படாத புன்னங்கங்களைக் கொண்ட கலம் ஆகும். அதாவது (pro-முன்னான) ஆதியான கலம் ஆகும். (உதாரணம்:- சகல பாக்டீரியா கலங்களும்).
நிலையற்ற கரு உடையது. பெரும்பாலும் ஒரு கலம் உடையது . சில உயிர்கள் தனது வாழ்க்கை சுழற்சியில் பல்கலங்களை கொண்டுள்ளது (எ.கா. Myxobacteria). நிலைகருவற்ற உயிர்கள் குளிர் பகுதிகளில் இருந்து கொதிநிலை வரை இருக்கும் சூழ்நிலைகளிலும் வாழ்பவை. இவைகள் நிலைகருவுள்ள உயிர்களிடம் இருந்து பல நிலைகளில், அமைப்புகளில் வேறுபட்டவை. விரிவாக அறிய இப்பகுதியில் இருக்கும் கலக்கொள்கை பார்க்கவும்.
நிலைகருவற்ற உயிர்கள் தன்னை சுற்றி சவ்வு, கலச்சுவரை கொண்டுள்ளது. தாவர உயிரணுக்களில் கலச்சுவர் உள்ளதால், சில வேளைகளில் இவைகள் தாவர வகைபாட்டியலில் பகுக்கப்படும். தெளிவற்ற கரு உடையது. தாவர உயிரணுக்களில் காணப்படும் பசுக்கணிகங்கள் காணப்படுவதில்லை. இருந்தாலும் சில நிலைகருவற்ற உயிர்கள் ஒளிச்சேர்க்கை இயல்புடையவை. தாவர, விலங்கு உயிரணுக்களில் உள்ள இழைமணி நிலைகருவற்ற உயிர்கள் காணப்படுவதில்லை. இவைகளில் ஆற்றல் காரணி எ.டி.பி (ATP) அதனின் உற்பத்திக்கு மூலமான எலேக்ட்ரோன் கடத்தல் (Electron transport system) கருவை போன்று காணப்படும் பகுதிக்கு வெளியில் நடைபெறுகிறது. மேலும் புரத உற்பத்தி நடைபெறும் இரைபோசொம் நிலைகருவுள்ள உயிர்களிடம் இருக்கும் இரைபோசொம் அளவுகளில் வேறுபட்டவை. இவைகளிடம் காணப்படும் நகர்திலிகள் (flagella) நிலைகருவுள்ள உயிர்களிடம் இல்லை. நகர்திலிகளை கொண்டு ஒரு இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு நகர்ந்து செல்கின்றன.
நிலைகருவற்ற உயிர்களின் அமைப்புகள், வாழும் சூழ்நிலைகள், நகர்திலிகள், உயிர்வளி (காற்று மற்றும்) பல காரணிகளை பொருந்து பல வகையாக பிரிக்கப்படுகின்றன.
கல அமைப்புகளை பொருத்து,
வாழும் சூழ்நிலைகளை பொருத்து,
நகத்திலிகளை (flagella) பொருத்து,
உயிர்வளிகளை பயன்படுத்துவதை பொருந்து, உயிர்வளி உயிர்கள் (Aerobic) மற்றும் உயிர்வளியற்ற உயிர்கள் (anaerobic) என பெரும் பிரிவாக பிரிக்கப்படும். மேலும் உயிர்வளி உயிர்கள்,
சிலவகை நிலைகருவற்ற உயிர்கள் வேதி பொருள்களை நோக்கி நகரும் தன்மை உடையவை. இந் நிகழ்வுக்கு வேதி நகர்த்தல் (chemotaxisis) எனவும், அவ்வகையான வேதி பொருள்களுக்கு வேதி நகர்த்தி (chemo attractant) எனவும் அழைக்கப்படும்.
செல் சுவரின் வேதி பொருளின் அளவுகளை பொருந்து நிலைகருவற்ற இரு வகையாக பிரிக்கப்படுகின்றன.
மாந்த அளவீடுகளை பொருந்து மேலும் மாந்த அளவுகளை பொருந்து நிலைகருவற்ற உயிர்கள் இரு வகையாக பிரிக்கப்படும்.