dcsimg

பைப்பூஞ்சைத் தொகுதி ( Tamil )

provided by wikipedia emerging languages

பைப்பூஞ்சைத் தொகுதி (Ascomycota) என்பது பூஞ்சைத் திணையின் (உலகின்) ஒரு தொகுதியாகும். இது கதைப்பூஞ்சைத் தொகுதியோடு சேர்ந்து உயர்பூஞ்சை துணைத்திணையை (துணை உலகை) உருவாக்குகின்றன. இதன் உறுப்பினர்கள் பொதுவாகப் பைப்புஞ்சைகள் அல்லது அசுக்கோமைசிட்டுகள் எனப்படுகின்றன. இது பூஞ்சை உலகின் மிகப் பெரிய தொகுதியாகும். இதில் 64,000 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.[1]

பைப்பூஞ்சைகளின் பாலினமற்ற இனப்பெருக்கமும் பான்மைகளும்

பைப்பூஞ்சைகள் (Ascomycetes)

இவை 'விதைத்தூள் வீசிகள்'. இந்தப் பூஞ்சைகள் நுண்னளவு விதைத்தூள்களைச் சிறப்பு, நீளமான விதைப்பைகளில் உருவாக்குகின்றன. எனவே, இந்தப் பூஞ்சைத் தொகுதிக்குப் பைப்பூஞ்சைத் தொகுதி எனும் பெயர் வந்தது.

பாலினமற்ற இனப்பெருக்கம்

1)தூசுத்துகள் (Conidia) உருவாக்கம்

Conidia Formation.png
Conidia Formation Image.png

2) மொட்டுவிடல்

Budding.png

பைப்பூஞ்சைகளின் பான்மைகள்

பைப்பூஞ்சைத் தொகுதி புற உருவத்தில் பன்முகம் வாய்ந்தன. இக்குழுவில் ஒற்றை உயிர்க்கல நொதிகள் முதல் சிக்கலான கிண்ன வடிவ உயிரிகள் வரை அமைந்துள்ளன.

பைப்பூஞ்சைத் தொகுதியில் 2000 பேரினங்களும் 30,000 இனங்களும் இனங்காணப் பட்டுள்ளன.

இப்பல்வகைக் குழுக்களிடையே உள்ள ஒன்றிணைக்கும் பான்மையாக பைவடிவ இனப்பெருக்கக் கட்டமைப்பு அமைகிறது, இது அசுக்கசு (ascus), எனப்படுகிறது. என்றாலும் சிலவேளைகளில் பூஞ்சை வாழ்க்கைச் சுழற்சியில் இது அவ்வளவாக பங்கேற்பதில்லை.

பல பைப்பூஞ்சைகள் வணிக முதன்மை வாய்ந்தவை. ஈசுட்டு நொதி அடுதல், காய்ச்சுதல், தேறல் (மது) நொதித்தல் ஆகியவற்ரில் பயன்படுகிறது, திரபுள்களும் மோறெல்களும் (morels) அரச உயர் உணவுகளாக அமைகின்றன.

இவை மரங்களுக்குப் பல நோய்களை உண்டாக்க வல்லன. எ. கா. : டச்சு எல்ம் நோய், ஆப்பிள் துருநோய்.

தாவர நோயீனும் சில பைப்பூஞ்சைகளாக apple scab, rice blast, the ergot fungi, black knot, பொடி mildews ஆகியன அமைகின்றன.

ஈசுட்டு நொதிகள் சாராயம் காய்ச்சவும் மெத்தப்பம் சுடவும் பயன்படுகின்றன. பெனிசிலியம் பூசணம்(mold) பெனிசிலின் நுண்ணுயிர்க்கொல்லியை உருவாக்கப் பயன்படுகிறது.

பெரும்பாலான பைப்பூஞ்சைத் தொகுதியின் பாதியினங்கள் பாசியுடன் கொள்ளும் இணைவாழ்வால் கற்பாசியை உருவாக்குகின்றன.

மோறெல்களைப் போன்ற விலைமிக்க உண்ணும் பூஞ்சைகள் தாவர வேர்ப்பூஞ்சைகளாகச் செயற்பட்டு, மரங்கட்கு நீரையும் ஊட்டத்தையும் வழங்குகின்றன; சிலவேளைகளில், பூச்சிகளில் இருந்தும் அவற்றைக் காக்கின்றன.

பெரும்பாலான பைப்பூஞ்சைகள் தரைவாழ்விகளாகவோ ஒட்டுண்ணிகளாகவோ அமைகின்றன. என்றாலும் சில கடல் உவர்நீரிலும் நன்னீரிலும் வாழும் தகவமைப்பைப் பெற்றனவக உள்ளன.

காளான் இழைகளின் கலச்சுவர்கள் [கதைப்பூஞ்சைத் தொகுதி]]யைப் போலவே, சித்தின் (chitin) அல்லது பீட்டாக் குளூக்கான்களால் (β-glucans) ஆகியனவாக அமைகின்றன. என்றாலும், இந்த நாரிழைகள் களாக்டோசு, மன்னோசுதஆகிய சர்க்கரைகளைக் கொண்ட இனிமப்புரத வலைப்பின்னலில் அமைக்கப்பட்டுள்ளன.

பைப்பூஞ்சைகளின் காளன் இழைப்படலம் வழக்கமாக பிளவுறு காளான் இழை (septate hyphae) களால் ஆனவையாகும். என்றாலும் இந்தப் பிளவுண்ட பிரிவுகளில் குறிப்பிட்ட நிலையான எண்ணிக்கையில் கல்க்கருக்களைக்க் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை.

பிளவுண்ட சுவர்க்ளில் பிளவுண்ட விதைத்தூள்கள் உள்ளமையால், இவை கலக்கணிகத் தொடர்ச்சியைக் காளான் இழைழுவதும் உருவாக்குகின்றன. உகந்த நிலைமைகளில், கலக்கருக்கள் பிளவுண்ட அறைகளில் பிளவுண்ட விதைத்தூள்களால் நகரவல்லன.

பைப்பூஞ்சைத் தொகுதியின் தனித்தன்மை வாய்ந்த பான்மையாக ( ஆனால் அனைத்துப் பைப்பூஞ்சைகளிலும் அமைவதில்லை) வொரோனின் உடல்கள் காளான் இழைத் துண்டங்களைப் பிரிக்கும் பிளவுகளின் இருபக்கங்களிலும் அமைதல் ஆகும். இவை பிளவுப்புறைகளைக் கட்டுபடுத்துகின்றன. பக்கத்தில் உள்ள காளான் இழை சிதைந்தால், வொரோனின் உடல்கள் பிளவுப்புரைகளை அடைத்துக் கலக்கணிகம் சிதைந்த அறைக்குள் சென்று வீணாகாமல் தடுத்துவிடும். வொரோனின் உடல்கள் கோள, அறுகோண, செவ்வகப் படல வடிவங்களில் படிகப் புரதச் சட்டகங்களில் அமைகின்றன.

தற்கால வகைபாடு

குறிப்புகள்

  1. Kirk et al., p. 55.

நூல்தொகை

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

பைப்பூஞ்சைத் தொகுதி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

பைப்பூஞ்சைத் தொகுதி (Ascomycota) என்பது பூஞ்சைத் திணையின் (உலகின்) ஒரு தொகுதியாகும். இது கதைப்பூஞ்சைத் தொகுதியோடு சேர்ந்து உயர்பூஞ்சை துணைத்திணையை (துணை உலகை) உருவாக்குகின்றன. இதன் உறுப்பினர்கள் பொதுவாகப் பைப்புஞ்சைகள் அல்லது அசுக்கோமைசிட்டுகள் எனப்படுகின்றன. இது பூஞ்சை உலகின் மிகப் பெரிய தொகுதியாகும். இதில் 64,000 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்