dcsimg

வெண்பிடரி பட்டாணி குருவி ( Tamil )

provided by wikipedia emerging languages

வெண்பிடரி பட்டாணி குருவி என்பது மேற்கு மற்றும் தென் இந்தியாவின் வறண்ட முட்புதர் காடுகளில் இரண்டு பிரிக்கப்பட்ட எண்ணிக்கைகளில் வாழும் இந்தியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

இக்குருவியின் பரவலானது அடர்த்தியாக இல்லாமல் ஆங்காங்கே குறிப்பிட்ட தொகைகளில் காணப்படுகிறது. இது அற்றுவிட்ட இனம் ஆகக்கூடியதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாகக் கருதப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது மரங்கொத்திகளால் உருவாக்கப்படும் மரப்பொந்துகள் போன்ற இவை வாழத் தகுந்த இடங்களின் பற்றாக்குறையே ஆகும்.[2]

இந்தக் குருவியானது தாமஸ் சி. ஜெர்டென் என்பவரால் நெல்லூருக்கு அருகிலுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ளூர் வேட்டைக்காரரிடம் இருந்து பெறப்பட்ட ஒரு உடலைக் கொண்டு கண்டறியப்பட்டது.[3] 1863லும் இவ்வகை குருவியின் ஒரு உடல் பெங்களூருக்கு அருகில் பெறப்பட்டது. அதற்குப் பிறகு நீண்ட காலத்திற்கு தென்னிந்தியாவில் இக்குருவியை பார்த்ததாக எவ்வித பதிவுகளும் இல்லை. ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவர் மேற்கு மற்றும் தென் இந்தியாவில் காணப்படும் இக்குருவிகள் இரண்டு வேறுபட்ட இனங்களாக இருக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.[4] தென்னிந்தியாவில் மீண்டும் குருவிகள் பிலிகிரிரங்கன் குன்றுகளில் இருந்து ஒரு உடலை பறவையியலாளர் சலீம் அலி பெற்றபோது மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்குன்றுகளுக்கு அருகில் உள்ள காவேரி பள்ளத்தாக்கை இக்குருவி இனம் வாழ்விடமாக கொண்டுள்ளது. இக்குருவியானது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் பார்க்கப்பட்டதாக பதிவுகள் உள்ளன.[5] மேற்கு மற்றும் தென்னிந்திய குருவிகள் இருவேறு உயிரினங்கள் என சலீம் அலி கூறினார். ஆனால் அவரது கூற்றுக்கு வலு சேர்க்க தகுந்த ஆதாரங்கள் எதுவும் கிடையாது.[6][7] மேற்கு இந்தியாவில் இக்குருவிகளின் பரவலானது பெரிய அளவிலும் பொதுவாக அறியப்பட்ட ஒன்றாகவும் உள்ளது. அங்கே இவை முக்கியமாக கட்ச் பகுதிகளிலும் மற்றும் ராஜஸ்தானின் பகுதிகள் வரையும் பரவி காணப்படுகின்றன. பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள இவ்வகை குருவியின் ஒரு உடல் பூடானில் பெறப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது தவறான குறிப்பு என்று கருதப்படுகிறது.[8][9] வயநாடு, அன்ஷி தேசிய பூங்கா மற்றும் தர்வத் ஆகிய இடங்களில் இக்குருவி காணப்பட்டதாக கூறப்படும் பதிவுகளும் நம்பத் தகுந்தவை அல்ல என்று கருதப்படுகிறது.[7]

உசாத்துணை

  1. BirdLife International (2012). "Parus nuchalis". IUCN Red List of Threatened Species (IUCN) 2012. https://www.iucnredlist.org/details/22711924/0. பார்த்த நாள்: 26 November 2013. old-form url
  2. "அரியவகை இனமான வெண்பிடரி பட்டாணி குருவியை படம்பிடித்த தலைமையாசிரியர்!". மூல முகவரியிலிருந்து டிசம்பர் 25, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் டிசம்பர் 25, 2019.
  3. Jerdon, TC (1863). Birds of India. Volume 2. Part 1. The Military Orphan Press, Calcutta. பக். 279. https://archive.org/stream/birdsofindiabein21jerd#page/279/mode/1up/.
  4. Jones, S (2007). "Sightings of White-naped Tit Parus nuchalis in Arogyavaram, Chittoor district, Andhra Pradesh". Indian Birds 3 (5): 93–94. http://www.indianbirds.in/pdfs/IB.3.5.198-199.pdf.
  5. Lott, E. J.; C. Lott (1999). "On the occurrence of White-naped Tit Parus nuchalis in S. India". Forktail 15: 93–94. http://orientalbirdclub.org/publications/forktail/15pdfs/Lott-Tit.pdf.
  6. 7.0 7.1 Sadananda KB; D. H. Tanuja; M. Sahana; T. Girija; A. Sharath; M. K. Vishwanath; A. Shivaprakash (2010). "Observations on the White-naped Tit Parus nuchalis in Cauvery Wildlife Sanctuary, Karnataka". Indian Birds 6 (1): 12–14.
  7. Gadow, Hans (1883). Catalogue of the birds in the British Museum. Cichlomorphae Part 5. Volume 8. p. 38. https://archive.org/stream/catalogueofbirds08brit#page/38/mode/1up/.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

வெண்பிடரி பட்டாணி குருவி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

வெண்பிடரி பட்டாணி குருவி என்பது மேற்கு மற்றும் தென் இந்தியாவின் வறண்ட முட்புதர் காடுகளில் இரண்டு பிரிக்கப்பட்ட எண்ணிக்கைகளில் வாழும் இந்தியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

இக்குருவியின் பரவலானது அடர்த்தியாக இல்லாமல் ஆங்காங்கே குறிப்பிட்ட தொகைகளில் காணப்படுகிறது. இது அற்றுவிட்ட இனம் ஆகக்கூடியதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாகக் கருதப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது மரங்கொத்திகளால் உருவாக்கப்படும் மரப்பொந்துகள் போன்ற இவை வாழத் தகுந்த இடங்களின் பற்றாக்குறையே ஆகும்.

இந்தக் குருவியானது தாமஸ் சி. ஜெர்டென் என்பவரால் நெல்லூருக்கு அருகிலுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ளூர் வேட்டைக்காரரிடம் இருந்து பெறப்பட்ட ஒரு உடலைக் கொண்டு கண்டறியப்பட்டது. 1863லும் இவ்வகை குருவியின் ஒரு உடல் பெங்களூருக்கு அருகில் பெறப்பட்டது. அதற்குப் பிறகு நீண்ட காலத்திற்கு தென்னிந்தியாவில் இக்குருவியை பார்த்ததாக எவ்வித பதிவுகளும் இல்லை. ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவர் மேற்கு மற்றும் தென் இந்தியாவில் காணப்படும் இக்குருவிகள் இரண்டு வேறுபட்ட இனங்களாக இருக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளார். தென்னிந்தியாவில் மீண்டும் குருவிகள் பிலிகிரிரங்கன் குன்றுகளில் இருந்து ஒரு உடலை பறவையியலாளர் சலீம் அலி பெற்றபோது மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்குன்றுகளுக்கு அருகில் உள்ள காவேரி பள்ளத்தாக்கை இக்குருவி இனம் வாழ்விடமாக கொண்டுள்ளது. இக்குருவியானது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் பார்க்கப்பட்டதாக பதிவுகள் உள்ளன. மேற்கு மற்றும் தென்னிந்திய குருவிகள் இருவேறு உயிரினங்கள் என சலீம் அலி கூறினார். ஆனால் அவரது கூற்றுக்கு வலு சேர்க்க தகுந்த ஆதாரங்கள் எதுவும் கிடையாது. மேற்கு இந்தியாவில் இக்குருவிகளின் பரவலானது பெரிய அளவிலும் பொதுவாக அறியப்பட்ட ஒன்றாகவும் உள்ளது. அங்கே இவை முக்கியமாக கட்ச் பகுதிகளிலும் மற்றும் ராஜஸ்தானின் பகுதிகள் வரையும் பரவி காணப்படுகின்றன. பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள இவ்வகை குருவியின் ஒரு உடல் பூடானில் பெறப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது தவறான குறிப்பு என்று கருதப்படுகிறது. வயநாடு, அன்ஷி தேசிய பூங்கா மற்றும் தர்வத் ஆகிய இடங்களில் இக்குருவி காணப்பட்டதாக கூறப்படும் பதிவுகளும் நம்பத் தகுந்தவை அல்ல என்று கருதப்படுகிறது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்