இமயமலை வரையாடு (Himalayan tahr) என்பது ஒரு பெரிய, மலை வெள்ளாடு ஆகும். இவை இமயமலையில் உள்ள தெற்கு திபெத் , வட இந்தியா, நேபாளம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறன. வேட்டையாடப்படுவதன் காரணமாக இவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது. இதனால் அச்சுறு நிலையை அண்மித்த இனம் என்று பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அறிவித்துள்ளது.[1] இமயமலை வரையாடுகள் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.[2]
இவற்றுக்கு கழுத்திலிருந்தும், தோள்பட்டையில் இருந்தும் நீண்ட முடி முட்டிவரை தொங்கும், பறட்டைன பிடரிமயிரும், உறுதியான உடலும், வலுவான கால்களும் கொண்டவை. குறுகிய விறைப்பான காதுகள், பின்நோக்கி வளைந்த கொம்புகள் கொண்டவை. உடல் நிறம் சிவப்பு கலந்த பழுப்பு நிறம் கொண்டது.
இமயமலை வரையாடு (Himalayan tahr) என்பது ஒரு பெரிய, மலை வெள்ளாடு ஆகும். இவை இமயமலையில் உள்ள தெற்கு திபெத் , வட இந்தியா, நேபாளம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறன. வேட்டையாடப்படுவதன் காரணமாக இவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது. இதனால் அச்சுறு நிலையை அண்மித்த இனம் என்று பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அறிவித்துள்ளது. இமயமலை வரையாடுகள் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.