dcsimg

கருப்புத்தலை மீன்கொத்தி ( тамилски )

добавил wikipedia emerging languages

 src=
இந்திய மாநிலமான கோவாவில் அமைந்துள்ள சுஹாரி நதியில் காணப்படும் ஒரு ஆண பறவை

கருப்புத்தலை மீன்கொத்தி (black-capped kingfisher) இவை வெப்ப மண்டல ஆசியாவின் பலபகுதிகளிலும், சீனா, கொரியா, தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளிலும் காணப்படுகின்றன. இப்பறவை மரங்களில் வாழும் மீன்கொத்தி இனத்தைச் சார்ந்தது ஆகும். இவை வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து இலங்கை, ஜாவா, தாய்லாந்து, மற்றும் புருனே போன்ற தீவு நாடுகளுக்குச் செல்லுகிறது. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை காணப்படும் இடங்கள் நீர் நிலைகளுக்கு அருகில் என்றாலும் சில நேரங்களில் சதுப்பு நிலக்காடுகளிலும் காணலாம்.

இவை பொதுவாக கோடை காலங்களில் இனப்பெருக்கம் செய்கிறது. இதன் கூடுகளைப் பூமியில் பள்ளம் தோண்டி அமைத்துக்கொள்ளுகின்றன. ஒரு தடவைக்கு 4 முதல் 5 முட்டைகள் இட்டு அடைகாத்து வருகிறன.[2] மற்ற மீன்கொத்திகளைப்போலவே இவற்றையும் இதன் நீல நிற இறகிற்காவே வேட்டையாடப்படுகின்றனர். சீனா நாட்டில் இதன் இறகுகளைக்கொண்டு விசிறி செய்யப்படுகிறது. ஆங்காங் நாட்டில் இதன் இறகுகள் கொண்டு பெண்கள் பயன்படுத்தும் ஆபரணங்கள் செய்யப்படுகின்றது. [3][4]

குறிப்புகள்

  1. "Halcyon pileata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. Baker, E.C. Stuart. The Fauna of British India including Ceylon and Burma. Birds. Volume IV. (2nd ). London: Taylor and Francis. பக். 271–272. https://archive.org/stream/BakerFbiBirds4/BakerFBI4#page/n301/mode/1up.
  3. Sharpe, R. B. (1871). A monograph of the Alcedinidae: or family of Kingfishers. பக். 169–170. https://archive.org/stream/monographofalced00shar#page/n385/mode/2up/.
  4. Robert Swinhoe (1860). "The ornithology of Amoy (China)". Ibis 2 (1): 45–68. doi:10.1111/j.1474-919X.1860.tb06351.x.

வெளி இணைப்பு

  • Kingfisher videos இணையத்தில் பறவைகளின் தொகுப்பு
лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages

கருப்புத்தலை மீன்கொத்தி: Brief Summary ( тамилски )

добавил wikipedia emerging languages
 src= இந்திய மாநிலமான கோவாவில் அமைந்துள்ள சுஹாரி நதியில் காணப்படும் ஒரு ஆண பறவை

கருப்புத்தலை மீன்கொத்தி (black-capped kingfisher) இவை வெப்ப மண்டல ஆசியாவின் பலபகுதிகளிலும், சீனா, கொரியா, தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளிலும் காணப்படுகின்றன. இப்பறவை மரங்களில் வாழும் மீன்கொத்தி இனத்தைச் சார்ந்தது ஆகும். இவை வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து இலங்கை, ஜாவா, தாய்லாந்து, மற்றும் புருனே போன்ற தீவு நாடுகளுக்குச் செல்லுகிறது. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை காணப்படும் இடங்கள் நீர் நிலைகளுக்கு அருகில் என்றாலும் சில நேரங்களில் சதுப்பு நிலக்காடுகளிலும் காணலாம்.

இவை பொதுவாக கோடை காலங்களில் இனப்பெருக்கம் செய்கிறது. இதன் கூடுகளைப் பூமியில் பள்ளம் தோண்டி அமைத்துக்கொள்ளுகின்றன. ஒரு தடவைக்கு 4 முதல் 5 முட்டைகள் இட்டு அடைகாத்து வருகிறன. மற்ற மீன்கொத்திகளைப்போலவே இவற்றையும் இதன் நீல நிற இறகிற்காவே வேட்டையாடப்படுகின்றனர். சீனா நாட்டில் இதன் இறகுகளைக்கொண்டு விசிறி செய்யப்படுகிறது. ஆங்காங் நாட்டில் இதன் இறகுகள் கொண்டு பெண்கள் பயன்படுத்தும் ஆபரணங்கள் செய்யப்படுகின்றது.

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages