வெர்டிசெல்லா (vorticella) ஒரு நீண்ட எளிமையான மெல்லிய காம்புடன் கூடிய மணி போன்ற உடலைக் கொண்ட ஒரு செல் உயிரி ஆகும்.[1] இதன் உடம்பு பெல்லிக்கிள், புறப்பிளாசம் மற்றும் அகப்பிளாசம் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது. பெல்லிக்கிளின் கீழ் பகுதியில் சுருங்கும் தன்மை கொண்ட மையோநீம்கள் உள்ளன. மணிப்போன்ற (Bell Shaped) பகுதியின் விளம்பு கெட்டியானதாக இருக்கு. இந்த கெட்டியான பகுதியில் ஒரு வரிசை குறுஇழை வளையத்தைக் கொண்டது. மணியின் வாய் பகுதியை தட்டு (Disc) எனப்படும்.வாய்ப்பள்ளம் (Peristomial groove) விளிம்பிற்கும் தட்டிற்கும் இடையில் உள்ளது. இது வெஸ்டிபியூல் (Vestibule) என்னும் புனல் வடிவக் குழாயக கீழ்நோக்கி வருகின்றது. வெஸ்டிபியூலின் கீழ் முனையில் வாய் உள்ளது. இது செல் தொண்டையில் (Cytopharynx) திறந்து புரோட்டோபிளாசத்தில் முடிவடைகிறது. குறு இழை (Cilia) உடலின் மேல் பகுதியில் மட்டுமே உள்ளது. இக்குறு இழைகள் இரு வரிசையாக அமைந்துள்ளது. அகப்பிளாசத்தில் நீண்ட வளைந்த குதிரை-லாட வடிவத்தில் பெரிய உட்கருவும், சிறய உட்கரு, சுருங்கு நுண்குமிழிகள் மற்றும் சில உணவு நுண்குமிழிகளும் காணப்படுகின்றன..[1][2]
ஹொலோசோயிக் (Holozoic) முறையில் உணவூட்டம் நடைபெறுகிறது.
நீள் இருசமப்பிளவு (Binary fission) மற்றும் இணைவு (conjugation) முறையில் நடைபெறுகிறது.
வெர்டிசெல்லா (vorticella) ஒரு நீண்ட எளிமையான மெல்லிய காம்புடன் கூடிய மணி போன்ற உடலைக் கொண்ட ஒரு செல் உயிரி ஆகும். இதன் உடம்பு பெல்லிக்கிள், புறப்பிளாசம் மற்றும் அகப்பிளாசம் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது. பெல்லிக்கிளின் கீழ் பகுதியில் சுருங்கும் தன்மை கொண்ட மையோநீம்கள் உள்ளன. மணிப்போன்ற (Bell Shaped) பகுதியின் விளம்பு கெட்டியானதாக இருக்கு. இந்த கெட்டியான பகுதியில் ஒரு வரிசை குறுஇழை வளையத்தைக் கொண்டது. மணியின் வாய் பகுதியை தட்டு (Disc) எனப்படும்.வாய்ப்பள்ளம் (Peristomial groove) விளிம்பிற்கும் தட்டிற்கும் இடையில் உள்ளது. இது வெஸ்டிபியூல் (Vestibule) என்னும் புனல் வடிவக் குழாயக கீழ்நோக்கி வருகின்றது. வெஸ்டிபியூலின் கீழ் முனையில் வாய் உள்ளது. இது செல் தொண்டையில் (Cytopharynx) திறந்து புரோட்டோபிளாசத்தில் முடிவடைகிறது. குறு இழை (Cilia) உடலின் மேல் பகுதியில் மட்டுமே உள்ளது. இக்குறு இழைகள் இரு வரிசையாக அமைந்துள்ளது. அகப்பிளாசத்தில் நீண்ட வளைந்த குதிரை-லாட வடிவத்தில் பெரிய உட்கருவும், சிறய உட்கரு, சுருங்கு நுண்குமிழிகள் மற்றும் சில உணவு நுண்குமிழிகளும் காணப்படுகின்றன..