சூபா புல் அல்லது இபில்-இபில் (Leucaena leucocephala) மரவகை தீவனப் பயிராகும். சவுண்டல் அல்லது கூபா புல் என்றும் அழைக்கப்படும் இது சிறிய, விரைவான வளர்ச்சியைக் கொண்ட தொட்டாச்சுருங்கிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது[3][4]. சூபா புல், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரமாகும்[5] நீர்ப்பாசனம் இருக்கும் இடங்களில், தூய சூபாபுல் ரகம் ஒரு எக்டேரில் 80-100 டன் அளவிற்கு பசுந்தீவனத்தினைக் கொடுக்கும்[6].
இது தெற்கு மெக்சிக்கோ மற்றும் வடக்கு நடு அமெரிக்கா, (பெலீசு மற்றும் குவாத்தமாலா) ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.[1][7] ஆயினும் அயனமண்டல நாடுகள் எங்கனும் இயற்கையாக வளர்கின்றது. இது white leadtree,[8] jumbay, மற்றும் white popinac.[9] எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது இது கிரெக்க மொழியில் யில் இருந்து வருவிக்கப்பட்ட பெயரான λευκό, "வெள்ளை" என்ற பொருளையும் κέφαλος, "தலை", என்றும் பொருள் தருவதாக இதன் மலர் அழைக்கப்படுகின்றது.[10] இந்தியாவில் 'சுபாபூல்' என வழங்கப்படுகின்றது. இபில்-இபில் விறகு, நார் மற்றும் விலங்குத் தீனி ஆகவும் பயன்படும்.
1970-1980களில் பன்முகப் பயன்பாடுகொண்ட அதிசயமான தாவரமாக இது அறிமுகமானது.[11] இது காலநடைகளுக்கான தீனியாக முன்னேற்றப்பட்ட அதே வேளை இது சில இடங்களில் களை போல பல்கிப் பெருகியதால் முரண்பாடான தாவரமாகவும் பார்க்கப்பட்டது.[2]
சூபா புல் அல்லது இபில்-இபில் (Leucaena leucocephala) மரவகை தீவனப் பயிராகும். சவுண்டல் அல்லது கூபா புல் என்றும் அழைக்கப்படும் இது சிறிய, விரைவான வளர்ச்சியைக் கொண்ட தொட்டாச்சுருங்கிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. சூபா புல், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரமாகும் நீர்ப்பாசனம் இருக்கும் இடங்களில், தூய சூபாபுல் ரகம் ஒரு எக்டேரில் 80-100 டன் அளவிற்கு பசுந்தீவனத்தினைக் கொடுக்கும்.
இது தெற்கு மெக்சிக்கோ மற்றும் வடக்கு நடு அமெரிக்கா, (பெலீசு மற்றும் குவாத்தமாலா) ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது. ஆயினும் அயனமண்டல நாடுகள் எங்கனும் இயற்கையாக வளர்கின்றது. இது white leadtree, jumbay, மற்றும் white popinac. எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது இது கிரெக்க மொழியில் யில் இருந்து வருவிக்கப்பட்ட பெயரான λευκό, "வெள்ளை" என்ற பொருளையும் κέφαλος, "தலை", என்றும் பொருள் தருவதாக இதன் மலர் அழைக்கப்படுகின்றது. இந்தியாவில் 'சுபாபூல்' என வழங்கப்படுகின்றது. இபில்-இபில் விறகு, நார் மற்றும் விலங்குத் தீனி ஆகவும் பயன்படும்.