dcsimg
Life » » Archaeplastida » » Angiosperms » » Rutacées »

Luvunga scandens (Roxb.) Buch.-Ham. ex Wight & Arn.

நறவம் ( tamoul )

fourni par wikipedia emerging languages

நறவம் என்பது ஒரு மலர்.[1]

  • நறவம்பூ கொத்துக்கொத்தாகப் பூக்கும்.[2]
  • சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று நறவ-மலர்.[3]
தேன்
  • நறவம் என்னும் சொல் மலரிலுள்ள தேனை உணர்த்துகிறது.[4]
கள்
  • நறவு, நறாஅ, நறா என்னும் சொற்கள் ஒருவகைக் கள்ளை உணர்த்துவன.
  • போர்க்களம் செல்லும் படைவீரர்களுக்கு ‘தீந்தண் நறவம்’ கொடுத்தனர் [5] என்னும்போது ‘நறவம்’ என்னும் சொல்லும் கள்ளை உணர்த்துகிறது.
  • அற்ப வாழ்க்கையை விரும்புபவர்கள் நறவம் ஊற்றிக் குடிப்பர்.[6]

நறை

நறவம் மலரை நறை எனவும் வழங்கிவந்தனர்.

  • நறை என்றாலே மணம் என்று பொருள்.[7]
  • மலைக்குறவர் மக்கள் நறைக்கொடியை அறுத்தெறிவர்.[8]
  • நறைக்காயை உருட்டி வேலன் குறி சொல்லுவான்.[9]
  • புனத்தில் எரியும்போது மணக்கும்.[10]
  • மணம் கமழும் கொடி.[11]
  • கோலால் தட்டியும் நறைக்கொடியில் மணம் பெறுவர்.[12]
  • தொழுவத்தைச் சுற்றிலும் நறைக்கொடி படர்ந்திருக்கும்.[13]
  • ஏறு தழுவலின்போது காளைகளுக்கு நறைக்கொடி சுற்றிப் பாய விடுவர்.[14]
  • மேகம் போல நறைக்கொடி பொங்கிப் படர்ந்திருக்கும்.[15]
  • நறவம் பூ குளுமையானது.[16]
  • கோடையில் நறைக்கொடி வாடிக் கிடக்கும்.[17]
  • சந்தன மரத்தில் நறைக்கொடி படர்வது உண்டு.[18]
  • நறை நாரில் பூத் தொடுப்பர்.[19]
  • மாளிகைகளில் நறைக்கொடியைப் புகைத்து மணம் பரப்புவர்.[20]
  • நீராடிய பின்னர் நறையைப் புகைத்துக் கூந்தலை உலர்த்துவர்.[21][22][23]
  • விழாக்காலத்தில் இதன் மணத்தைப் பரப்புவர்.[24][25]

நறா

நறா என்பது பூவை விளையவைத்த ஒருவகைக் கள். நறாக் கள் அதில் இடும் பூமொட்டுகளுக்கு ஏற்பச் சிறப்பு எய்தும். [26]

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்

வெளியிணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. நல்லிணர் நாகம், நறவம், சுரபுன்னை - பரிபாடல் 12-80
  2. ஊழ் இணர் நறவம் - பரிபாடல் 19-78
  3. குறிஞ்சிப்பாட்டு 91.
  4. மணிவண்டு காலைக் களிநறவம் தாது ஊத – சிலப்பதிகாரம் – 6 வெண்பா
  5. புறநானூறு - 292
  6. பூரிய மாக்கள் உண்பது மண்டி நார் அரி நறவம் உகுப்ப - பரிபாடல் 6-49
  7. பனி துறை பகன்றை நறை கொள் மா மலர் - புறம் 235/18 நறு விரை துறந்த நறை வெண் கூந்தல் - புறம் 276/1
  8. குறவர் கொன்ற குறை கொடி நறை பவர் - நற்றிணை 5/3
  9. பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன் - திருமுஊருகாற்றுப்படை 190
  10. நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை - குறுந்தொகை 339/1
  11. தண் கமழ் நறை கொடி கொண்டு வியல் அறை - ஐங்குறுநூறு 276/2
  12. கோல் எரி கொளை நறை புகை கொடி ஒருங்கு எழ - பரிபாடல் 17/6
  13. கொடி நறை சூழ்ந்த தொழூஉ - கலித்தொகை 103/21
  14. நறை வலம் செய விடா இறுத்தன ஏறு - கலித்தொகை 104/31
  15. ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க - கலித்தொகை 105/25
  16. நறை கால்யாத்த நளிர் முகை சிலம்பில் - அகம் 242/18
  17. நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம் - அகம் 257/2
  18. சாந்தம் பொறை_மரம் ஆக நறை நார் - அகம் 282/9
  19. நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி - புறம் 168/15
  20. நெடு நகர் வரைப்பின் கடி நறை புகைஇ - புறம் 281/6
  21. நன் நீராட்டி நெய் நறை கொளீஇய - புறம் 329/3
  22. நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே - பரிபாடல் 14/20
  23. நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் - பொருநராற்றுப்படை 238
  24. நறையும் விரையும் ஓச்சியும் அலவு_உற்று - குறிஞ்சிப்பாட்டு 7
  25. நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப - கலித்தொகை 101/12
  26. தம்தம் நனையினான் நந்தும், நறா. (நான்மணிக்கடிகை 47)
licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

நறவம்: Brief Summary ( tamoul )

fourni par wikipedia emerging languages

நறவம் என்பது ஒரு மலர்.

நறவம்பூ கொத்துக்கொத்தாகப் பூக்கும். சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று நறவ-மலர். தேன் நறவம் என்னும் சொல் மலரிலுள்ள தேனை உணர்த்துகிறது. கள் நறவு, நறாஅ, நறா என்னும் சொற்கள் ஒருவகைக் கள்ளை உணர்த்துவன. போர்க்களம் செல்லும் படைவீரர்களுக்கு ‘தீந்தண் நறவம்’ கொடுத்தனர் என்னும்போது ‘நறவம்’ என்னும் சொல்லும் கள்ளை உணர்த்துகிறது. அற்ப வாழ்க்கையை விரும்புபவர்கள் நறவம் ஊற்றிக் குடிப்பர்.
licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்