dcsimg

கொம்பேறி மூக்கன் (பாம்பு) ( tamili )

tarjonnut wikipedia emerging languages

கொம்பேறி மூக்கன் (Dendrelaphis tristis) என்பது ஒரு நஞ்சற்ற பாம்பு ஆகும்.

விளக்கம்

Bronzeback head sal.jpg

இப்பாம்பு தட்டையான தலையும், பெரிய கண்களும் கொண்டு ஒல்லியான, நீளமான உடல் கொண்டிருக்கும். அதன் உடல் மேலே வெண்கல நிற பட்டைகள் பின்பக்கம்வரை செல்கின்றன. இதன் உணவு மரத் தவளைகள், பல்லிகள், தவளைகள் ஆகும். ஆபத்தை ஏற்படுத்தாத இந்த பாம்பு மர உச்சியில் இருந்து தாவக்கூடியது. இதன் நிறம் கரும்பழுப்பு ஆதலால் இலைகள் மத்தியில் கண்களுக்குப் புலப்படாத வகையில் நன்கு பொருந்திவிடுகிறது. இந்த பாம்பு சுறுசுறுப்பான விரைவான துணிவுடைய பாம்பு ஆகும். இது தென் இந்தியாவிலும், இமயமலை அடிவாரத்திலும் காணப்படுகிறது. இந்தப் பாம்பு செப்டம்பர் மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கு இடையே ஆறு அல்லது ஏழு முட்டைகளை இடுகிறது. பிறகு 4-6 வாரங்களுக்கு அடைகாக்கிறது.

மேற்கோள்கள்

  • Boulenger, George A. 1890 The Fauna of British India, Including Bangladesh, Ceylon and Burma. Reptilia and Batrachia. Taylor & Francis, London, xviii, 541 pp.
  • Daudin, F. M. 1803 Histoire Naturelle Generale et Particuliere des Reptiles. Vol. 6. F. Dufart, Paris.
lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages

கொம்பேறி மூக்கன் (பாம்பு): Brief Summary ( tamili )

tarjonnut wikipedia emerging languages

கொம்பேறி மூக்கன் (Dendrelaphis tristis) என்பது ஒரு நஞ்சற்ற பாம்பு ஆகும்.

lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages