சிறிய சீழ்க்கைச் சிறகி அல்லது சிறிய சீழ்க்கைச்சிரவி[2](Lesser whistling duck, Dendrocygna javanica) என்பது வாத்து இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது இந்தியத் துணைக்கண்டத்திலும் தென்கிழக்காசியாவிலும் காணப்படுகின்றது. இதன் உடல் முழுவதும் பாக்கு நிறமானது. இதனால், இது வேறு தாராக்களுடன் இருந்தாலும் அடையாளங் காணலாம். இவற்றைத் தனித்தனியாகக் காண்பது மிகவும் அரிது. இவை எப்போதும் கூட்டம் கூட்டமாகவே திரியும்.[3] பத்து, பதினைந்து பறவைகள் சிறு சிறு கூட்டமாக நீர்ச் செடிகள் கொண்ட ஆழமற்ற நீர் நிலைகளிலும் நெல் வயல்களிலும் காணப்படும். நீர் நிலைகளின் அருகில் உள்ள மரங்களில் தங்குவதால் மரத்தாரா அல்லது மர வாத்து என்றும் அழைக்கப்படுகிறது. இதன் உணவு தவளை, நத்தை, மீன், புழுபூச்சிகள், தானியங்கள், இளந்தளிர்கள் போன்றவை ஆகும். இவை கூட்டமாகப் பறக்கும்போது விசிலடிப்பது போல ஒலி கேட்கும்.
சிறிய சீழ்க்கைச் சிறகி அல்லது சிறிய சீழ்க்கைச்சிரவி(Lesser whistling duck, Dendrocygna javanica) என்பது வாத்து இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது இந்தியத் துணைக்கண்டத்திலும் தென்கிழக்காசியாவிலும் காணப்படுகின்றது. இதன் உடல் முழுவதும் பாக்கு நிறமானது. இதனால், இது வேறு தாராக்களுடன் இருந்தாலும் அடையாளங் காணலாம். இவற்றைத் தனித்தனியாகக் காண்பது மிகவும் அரிது. இவை எப்போதும் கூட்டம் கூட்டமாகவே திரியும். பத்து, பதினைந்து பறவைகள் சிறு சிறு கூட்டமாக நீர்ச் செடிகள் கொண்ட ஆழமற்ற நீர் நிலைகளிலும் நெல் வயல்களிலும் காணப்படும். நீர் நிலைகளின் அருகில் உள்ள மரங்களில் தங்குவதால் மரத்தாரா அல்லது மர வாத்து என்றும் அழைக்கப்படுகிறது. இதன் உணவு தவளை, நத்தை, மீன், புழுபூச்சிகள், தானியங்கள், இளந்தளிர்கள் போன்றவை ஆகும். இவை கூட்டமாகப் பறக்கும்போது விசிலடிப்பது போல ஒலி கேட்கும்.