வெப்பாலை (Wrightia tinctoria) என்பது ஒருவகை மரமாகும். இதற்கு வெட்பாலை, நிலப்பாலை, பாலை, நிலமாலை, வற்சம், குடசம் ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இது பழந்தமிழகத்தில் பலை என அழைக்கப்பட்டது. ஐந்திணைகளில் ஒன்றான பாலை நிலத்துக்குப் பெயர் தந்தது இம்மரமே.[1][2] கடும் கோடையிலும் தளிரும், மலருமாக இந்த மரம் காட்சி தரும். யானை தாகம் தீர்த்துக் கொள்ளப் பாலை மரப்பட்டை களைக் கிழித்து நீரை உறிஞ்சும். பட்டை உரிக்கப்பட்ட மரம், தந்தம் போல வெண்மையாகக் காணப்படும். இதற்குத் தந்தப்பாலை என்ற பெயரும் உண்டு.
இது வறண்ட நிலத்தில் வளரும் மரம் என்பதாலும், பாலைத் திணைக்குரிய மரம் என்பதாலும் வெட்‘பாலை’ என்ற பெயர் உருவானது.[3]
இது ஒரு பூக்கும் தாவர இனமாகும். தமிழகமெங்கும் சாலை ஓரங்களில் வெண்ணிற மரப்பட்டைகளுடன் நிறைய வெட்பாலை மரங்கள் இருப்பதைப் பார்க்க முடியும். எதிரடுக்கில் அமைந்த இலைகளும் உச்சியில் வெண்ணிற மலர் கொத்துகளையும் பால் போன்ற சாற்றினையும் உடைய இலையுதிர் மரம். இதன் இலைக் காம்பை உடைத்தால் பால் வெளியாகும். இதன் காய்கள் இரட்டையாய் முனைகள் இணைந்து காணப்படும். பஞ்சு இணைந்த விதைகளையுடையது. விதை, பட்டை, ஆகியவை மருத்துவப் பயனுடையவை.[4]திருப்பாலைத்துறை என்னும் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது பாலை மரமாகும். தலத்தின் பெயர் தலமரத்தின் பெயரால் அமைந்ததேயாகும்.[2]
வெப்பாலை (Wrightia tinctoria) என்பது ஒருவகை மரமாகும். இதற்கு வெட்பாலை, நிலப்பாலை, பாலை, நிலமாலை, வற்சம், குடசம் ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இது பழந்தமிழகத்தில் பலை என அழைக்கப்பட்டது. ஐந்திணைகளில் ஒன்றான பாலை நிலத்துக்குப் பெயர் தந்தது இம்மரமே. கடும் கோடையிலும் தளிரும், மலருமாக இந்த மரம் காட்சி தரும். யானை தாகம் தீர்த்துக் கொள்ளப் பாலை மரப்பட்டை களைக் கிழித்து நீரை உறிஞ்சும். பட்டை உரிக்கப்பட்ட மரம், தந்தம் போல வெண்மையாகக் காணப்படும். இதற்குத் தந்தப்பாலை என்ற பெயரும் உண்டு.