dcsimg

ஹிஸ்பிட் முயல் ( tamili )

tarjonnut wikipedia emerging languages

ஹிஸ்பிட் முயல் அல்லது அசாம் முயல் என்பது ஒரு காட்டு முயல் ஆகும். இது தெற்கு ஆசியாவில் காணப்படுகிறது. இவை இந்தியாவில், இமயமலை அடிவாரத்தில் காணப்படுகின்றன. இன்று இந்த முயல்களின் வாழ்விடம் 500 சதுர கிமீ (190 சதுர மைல்) க்கும் குறைவாக சுருக்கப்பட்டு உள்ளது. இதனால் இவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. விவசாய நிலங்களின் பெருக்கம், அணைகள், மக்கள் தொகை வளர்ச்சி போன்ற காரணங்களினால் இவற்றின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது. இதை அருகிய இனம் என்று 1986 இல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அறிவித்து.[2] பண்புகள் இந்த முயலுக்கு தடித்த குட்டையான முள் போன்ற மயிர் இருக்கும். இதற்கு காதுகள் மிகவும் குறுகி சிறியதாக இருக்கும். [3] இது அடர் பழுப்பு நிற முடிகள் கொண்டும், வெள்ளை நிற வயிறும் உடையாது. சராசரியாக, இந்த முயல் தலை முதல் வால்வரை 476 மிமீ (18.7 அங்குலம்) நீளம் கொண்டது.[4]

பரவல் மற்றும் வாழ்விடம்

ஒரு காலத்தில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள டெராய், அசாம், தெற்கு நேபாளம், மேற்கு வங்கம், திரிபுரா போன்ற பகுதிகளில் காணப்பட்ட இந்த முயல்கள் தற்போது மேற்குவங்கம், அசாம் நேபாளம் ஆகிய காடுகளில் ஒடுங்கிவிட்டது.

மேற்கோள்கள்

  1. Hoffman, R.S.; Smith, A.T. (2005). "Order Lagomorpha". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Johns Hopkins University Press. பக். 194–195. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மையம்:62265494. http://www.departments.bucknell.edu/biology/resources/msw3/browse.asp?id=13500098.
  2. 2.0 2.1 "Caprolagus hispidus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2011).
  3. Pearson, J. T. (October 22, 1839). "18. Lepus hispidus". Proceedings of the Zoological Society of London VII: 152. http://www.archive.org/stream/proceedingsofgen36zool#page/n681/mode/2up.
  4. Macdonald, D. W. (2009). The Encyclopedia of Mammals. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-956799-9.
lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages

ஹிஸ்பிட் முயல்: Brief Summary ( tamili )

tarjonnut wikipedia emerging languages

ஹிஸ்பிட் முயல் அல்லது அசாம் முயல் என்பது ஒரு காட்டு முயல் ஆகும். இது தெற்கு ஆசியாவில் காணப்படுகிறது. இவை இந்தியாவில், இமயமலை அடிவாரத்தில் காணப்படுகின்றன. இன்று இந்த முயல்களின் வாழ்விடம் 500 சதுர கிமீ (190 சதுர மைல்) க்கும் குறைவாக சுருக்கப்பட்டு உள்ளது. இதனால் இவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. விவசாய நிலங்களின் பெருக்கம், அணைகள், மக்கள் தொகை வளர்ச்சி போன்ற காரணங்களினால் இவற்றின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது. இதை அருகிய இனம் என்று 1986 இல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அறிவித்து. பண்புகள் இந்த முயலுக்கு தடித்த குட்டையான முள் போன்ற மயிர் இருக்கும். இதற்கு காதுகள் மிகவும் குறுகி சிறியதாக இருக்கும். இது அடர் பழுப்பு நிற முடிகள் கொண்டும், வெள்ளை நிற வயிறும் உடையாது. சராசரியாக, இந்த முயல் தலை முதல் வால்வரை 476 மிமீ (18.7 அங்குலம்) நீளம் கொண்டது.

lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages