சுண்டெலிப் பறவைகள் என்பவை (குடும்பம் Coliidae, வரிசை Coliiformes) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பறவைகள் ஆகும். இது யூகவிடேவ்ஸ் (Eucavitaves) கிளையின் சகோதரிக் குழு ஆகும். யூகவிடேவ்ஸில் குயில் சுழலி (Leptosomatiformes), திரோகோன்கள் (Trogoniformes), புசேரோடிபார்மஸ், கோரசிபார்மஸ் மற்றும் பிசிபார்மஸ் ஆகியவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.[1] இந்த குழு துணை சஹாரா ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளது. இது அந்தக் கண்டத்தில் மட்டுமே காணப்படும் ஒரே பறவை வரிசையாகும். வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இவை பரவலான அளவில் இருந்தன. பாலியோசின் காலத்தில் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் பரவலாகக் காணப்பட்டன.[2] இவை மரங்களில் வாழக்கூடியவை ஆகும். இலைகளின் ஊடே கொறிணிகளைப் போல் ஓடுவதால் இவை சுண்டெலிப் பறவைகள் எனப் பெயர் பெற்றன.
சுண்டெலிப் பறவைகள் என்பவை (குடும்பம் Coliidae, வரிசை Coliiformes) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பறவைகள் ஆகும். இது யூகவிடேவ்ஸ் (Eucavitaves) கிளையின் சகோதரிக் குழு ஆகும். யூகவிடேவ்ஸில் குயில் சுழலி (Leptosomatiformes), திரோகோன்கள் (Trogoniformes), புசேரோடிபார்மஸ், கோரசிபார்மஸ் மற்றும் பிசிபார்மஸ் ஆகியவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழு துணை சஹாரா ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளது. இது அந்தக் கண்டத்தில் மட்டுமே காணப்படும் ஒரே பறவை வரிசையாகும். வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இவை பரவலான அளவில் இருந்தன. பாலியோசின் காலத்தில் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் பரவலாகக் காணப்பட்டன. இவை மரங்களில் வாழக்கூடியவை ஆகும். இலைகளின் ஊடே கொறிணிகளைப் போல் ஓடுவதால் இவை சுண்டெலிப் பறவைகள் எனப் பெயர் பெற்றன.