dcsimg

சே மரம் ( Tamil )

provided by wikipedia emerging languages
 src=
காய்த்துக் குலுங்கும் செம்மரம்
 src=
செம்மரத்தால் செய்யப்பட்ட தட்டு

சே மரத்தை (Soymida febrifuga) செம்மரம் என்றும் ரோட்டுசெம்மை மரம் என்றும் இக்காலத்தில் வழங்குகின்றனர். ரோட்டுசெம்மை அடர்சிவப்பு நிறம் கொண்டது. இது தழை, பூ, காய் உள்ள மரமாகப் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

தொல்காப்பியத்தில் சே மரம்

சே மரத்தைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. சே என் மரப்பெயர் ஒடு மர இயற்றே என்பது தொல்காப்பிய நூற்பா.[1]

சேங்கொடு (சே மரத்தின் கிளை)
சேஞ்செதிள் (சே மரத்தில் உரிந்து விழும் பொறுக்குப் பட்டை)
சேந்தோல் (சே மரத்துக் காயிலுள்ள தோல்)
சேம்பூ (சே மரத்துப் பூ)

என இச்சொல் புணரும் என்பதை உரையாசிரியர் விளக்கம் தருகிறார்.[2]

சொல் விளக்கம்

  • மரம்
சேயோன், சேதாம்பல் என்னும் சொற்களில் சே என்பது செம்மை நிறத்தை உணர்த்துவதை அறியலாம்.
சே மரத்தின் வயிரப்பகுதி கருஞ்சிவப்பு நிறம் கொண்டது. இதனால் இதனைச் சே என்றும், செம்மரம் வழங்கினர்.
  • எருது
சே என்னும் சொல் விலங்கில் ஆணினத்தைக் குறிக்கும்
(சே) பெற்றம் ஆயின் முற்றத்தோன்றாது [3]
"சேவின் கோடு (எருதின் கொம்பு) என வரும்.

மருத்துவப் பயன்

செம்மரம் லுபியோல், சிடோஸ்டேரோல், மீத்தைல் அங்கோலெனேட் (lupeol, sitosterol, methyl angolenate) ஆகிய வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது. செம்மரப் பட்டைகளில் டெட்ராநோர்டிட்ரைபினாய்டு என்ற வேதிப் பொருள் உள்ளது (tetranortriterpenoids). இப்பட்டைகளிலிருந்து பிசின் கிடைக்கிறது. நடுமரத்தில் பெஃப்ரிஃபூஜின், நாரிஜெனின், மைரிசெடின், டைஹைட்ரோமைரிசெடின் (febrifugin, naringenin, myricetin, dihydromyricetin) ஆகியவை உள்ளன. மரத்திலும் பட்டையிலும் டிஆக்சிஆண்டிரோபின் (deoxyandirobin) என்ற வேதிப்பொருள் உள்ளது. இலைகளில் குயிர்செடின் (quercetin),மற்றும் நைட்டினோசைட் (nitinoside) என்ற பொருட்கள் உள்ளன[4].

மரப்பட்டைகள் வயிற்றுப்போக்கு நோய்க்கும் காய்ச்சலுக்கும் மருந்தாகவும் பொது டானிக்காகவும் பயன்படுகிறது. இம்மரத்தின் எரிவடிச்சாறு (decoctin) வாய்ச்சுத்தம் செய்யும் மருந்து தயாரிக்கவும் (gargles), வஜினல் நோய்த்தொற்றுகள், ருமாட்டிக் மூட்டு வீக்கங்கள், வயிறு சுத்தம் செய்யும் எனிமாட்டா போன்ற மருந்துகள் தயாரிக்கவும் பயன்டுகின்றது.[4]

அடிக்குறிப்பு

  1. கி. மு. நாலாம் நூற்றாண்டுத் தொல்காப்பியம் உயிர்மயங்கியல் 76
  2. 13-ஆம் நூற்றாண்டு இளம்பூரணர்
  3. தொல்காப்பியம் உயிர் மயங்கியல் 77
  4. 4.0 4.1 "Soymida fabrifuga". பார்த்த நாள் January 24, 2015.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சே மரம்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages
 src= காய்த்துக் குலுங்கும் செம்மரம்  src= செம்மரத்தால் செய்யப்பட்ட தட்டு

சே மரத்தை (Soymida febrifuga) செம்மரம் என்றும் ரோட்டுசெம்மை மரம் என்றும் இக்காலத்தில் வழங்குகின்றனர். ரோட்டுசெம்மை அடர்சிவப்பு நிறம் கொண்டது. இது தழை, பூ, காய் உள்ள மரமாகப் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

Soymida febrifuga ( Spanish; Castilian )

provided by wikipedia ES

Soymida es un género monotípico de plantas fanerógamas perteneciente a la familia (Meliaceae). Su única especie: Soymida febrifuga, es originaria de India.[1][2]

Taxonomía

Soymida febrifuga fue descrita por (Roxb.) A.Juss. y publicado en Mémoires du Muséum d'Histoire Naturelle 19: 251. 1832.[3]

Sinonimia
  • Swietenia febrifuga Roxb.

Referencias

  1. «The Plant List». Consultado el 20 de junio de 2014.
  2. Soymida febrifuga en Jstor
  3. «Soymida febrifuga». Tropicos.org. Missouri Botanical Garden. Consultado el 20 de junio de 2014.

 title=
license
cc-by-sa-3.0
copyright
Autores y editores de Wikipedia
original
visit source
partner site
wikipedia ES

Soymida febrifuga: Brief Summary ( Spanish; Castilian )

provided by wikipedia ES

Soymida es un género monotípico de plantas fanerógamas perteneciente a la familia (Meliaceae). Su única especie: Soymida febrifuga, es originaria de India.​​

license
cc-by-sa-3.0
copyright
Autores y editores de Wikipedia
original
visit source
partner site
wikipedia ES

Soymida febrifuga ( Vietnamese )

provided by wikipedia VI

Soymida febrifuga là một loài thực vật có hoa trong họ Meliaceae. Loài này được (Roxb.) A. Juss. miêu tả khoa học đầu tiên năm 1832.[1]

Hình ảnh

Chú thích

  1. ^ The Plant List (2010). Soymida febrifuga. Truy cập ngày 15 tháng 9 năm 2013.

Liên kết ngoài


Hình tượng sơ khai Bài viết liên quan đến Họ Xoan (Meliaceae) này vẫn còn sơ khai. Bạn có thể giúp Wikipedia bằng cách mở rộng nội dung để bài được hoàn chỉnh hơn.
license
cc-by-sa-3.0
copyright
Wikipedia tác giả và biên tập viên
original
visit source
partner site
wikipedia VI

Soymida febrifuga: Brief Summary ( Vietnamese )

provided by wikipedia VI

Soymida febrifuga là một loài thực vật có hoa trong họ Meliaceae. Loài này được (Roxb.) A. Juss. miêu tả khoa học đầu tiên năm 1832.

license
cc-by-sa-3.0
copyright
Wikipedia tác giả và biên tập viên
original
visit source
partner site
wikipedia VI