dcsimg

லூனா அந்துப்பூச்சி ( Tamil )

provided by wikipedia emerging languages

லூனா அந்துப்பூச்சி (Actias selene). இது Saturnidae குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பட்டுப்புழு அந்துப்பூச்சியாகும். லூனா என்றால் நிலவையும், அதன் இறக்கைகளில் பிறை போன்ற பெரிய கண் வடிவ புள்ளிகள் உள்ளதாலும், மேலும் இவ்வகை அந்துப்பூச்சிகள் இரவில் மட்டுமே பறப்பதால் இவை Luna moth என்று அழைக்கப்படுகின்றன. காண்பதற்கு மிகவும் அரியதான இந்த அழகிய அந்துப்பூச்சி 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருப்புட்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் (காஞ்சிபுரம் மாவட்டம்) புங்க மரத்தில் இருந்தது மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

 src=
Luna moth found in Kanchipuram district 01.jpg

இந்திய சந்திரன் அந்துப்பூச்சி அல்லது இந்திய லூனா அந்துப்பூச்சி, saturnidae அந்துப்பூச்சியின் ஒரு வகை ஆகும். அரோரா மற்றும் குப்தா (1979) அவர்களின் கூற்றுப்படி இந்தியாவில் (சிக்கிம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மேற்கு வங்கம், பீகார், ஒரிசா, ஹிமாச்சல பிரதேசம், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் அந்தமான் தீவுகளிலும், நேபால்; பூடான், வங்காளம் ; மியான்மார்; இலங்கை; இந்தோனேசியா (போர்னியோ); சீனா, திபெத்; ஜப்பான் ஆகிய நாடுகளிலும்,மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது இந்தியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது. வெளிர் பச்சை நிற இறக்கைகளில் நிலவை போன்ற புள்ளிகள் இருப்பதால் லூனா என்ற பெயர் பெற்றன.

விளக்கம்

இளம் பச்சை நிறத்தில் பெரிய கண் போன்ற புள்ளிகளை இறக்கைகளில் கொண்ட இந்த பூச்சியைப் பார்த்தால் நம் கண்கள் விரிந்து ஆச்சர்யம் அடையும். இவற்றின் இறக்கைகள் பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக உள்ளன.இதன் இறக்கையின் நீட்டம் (அ) 114 மி.மீ, இறக்கை மாடம் 8-11.5 சென்டிமீட்டர் ஆகும் (3.1-4.5 இன்ச்). அதன் நீளம் 17.78 சென்டிமீட்டர் வரை கூட இருக்கும். இதன் முன் மற்றும் பின் இறக்கைகளின் விளிம்புகள் அடர் சிவந்த வண்ணத்தில் காணப்படுகின்றன. இவ்வகை அந்துப்பூச்சிகள் பெரும்பாலும் இரண்டு பிறப்பித்தல் முறையை கொண்டது. பெண் அந்துப்பூச்சி சுமார் 200 முட்டைகள் வரை இலையின் அடிப்பாகத்தில் இடும். இவை 8 முதல் 13 நாட்களுக்கு அடைகாக்கப்படும். நல்ல தட்பவெப்பநிலையில் அந்துப்பூச்சிகள் அதிகமான முட்டைகளை இடும்.

முட்டை பருவம்

முட்டைகள் 2 மி.மீ.அளவுடைய வெள்ளை நிறத்தில் கருப்பு மற்றும் பழுப்பு நிற கலவைகளுடன் பலவண்ண புள்ளிஅமைந்துள்ளது. புதிதாக வெளிவந்த புழுக்கள் சிவப்பு மற்றும் கரு நிற அடிவயிற்று சேணம் கொண்டிருக்கும். இரண்டாவது இடைஉயிரி புழுக்கள் கரு நிற தலையுடன் சிவந்த நிறத்துடன் இருக்கும். மூன்றாவது இடைஉயிரி பச்சை வண்ணத்தில் இருக்கும். முழு வளர்ச்சி அடைந்த புழு 8–10 cm அளவில் ஆப்பிள் பச்சை வண்ணத்தில் ஜோடியான புறப்பக்க மற்றும் பக்கவாட்டிலுள்ள மஞ்சள் முள் முள்ளந்தண்டுகள் கடைசி பிரிவினைத்தவிர அனைத்து பிரிவுகளிலும் இருக்கும். தன்னைச்சுற்றி இலையில் பட்டு இழையினை பின்னிக்கொள்ளும்.

 src=
Luna moth found in Kanchipuram district 02.jpg

புழு பருவம்

ஒவ்வொரு இடைஉயிரியும் (instar)முழுமை அடைய 5 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை ஆகும். முட்டையில் இருந்து சிறு புழுக்கள் பொரித்தவுடன் அவை பிர்ச்,(புர்ஜா மரம்) வால்நட்,( வாதுமை கொட்டை) பெர்சிம்மன், (சீமை பனிச்சை)ஸ்வீட் கம்,புங்கம் போன்ற மரங்களின் இலைகளை உண்ணும். இந்த புழுக்கள் 2-3 இடைஉயிரிகள் வரை கூடி வாழ்கின்ற தன்மை உடையதாக இருக்கும். பின்னர் தனியே வாழத்தொடங்கிவிடும். இவை (5 இடைஉயிரிகள் கடந்த பிறகே கூடு கட்டத் தொடங்கும். ஒவ்வொரு இடைஉயிரியின் முடிவிலும் சிறிய அளவிலான பட்டு இலையின் மேற்பாகத்தில் (vein) வைக்கப்படும். கடைசி இடைஉயிரி (instar) 9 cm நீளம் வரை வளரும்.

கூட்டுப்புழு பருவம்

லூனா அந்துப்பூச்சி கூடு கட்டிய பின் கூட்டுப்புழுவாக மாறும். கூட்டுப்புழு பருவத்தில் இப்பூச்சி மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். ஏதேனும் ஆபத்து வரும் போது கூட்டிற்குள் வினோத சப்தத்தை எழுப்பும். கூட்டுப்புழு பருவம் பொதுவாக 2 வாரங்கள் வரை நீடிக்கும்.

முழுவளர்ச்சி அடைந்த பூச்சி

முழுவளர்ச்சி அடைந்த பூச்சி 3 வாரங்களில் பட்டுக்கூட்டிலிருந்து வெளிவரும். முழுவளர்ச்சி அடைந்த பூச்சியின் இறக்கை நீட்டம் 116-122 மிமி இருக்கும். 60 mm பின் இறக்கைகள் இளம்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மிகுந்த உணர்திறன் வாய்ந்த நுண்ணுணர்வு ஏற்பிகளால் 4 முதல் 11 கி.மீ. தொலைவில் உள்ள ஒற்றை பாலியல் பெரோமோன் மூலக்கூறை இந்தியன் லூனா அந்துப்பூச்சி அறியும் திறனை பெற்றுள்ளது. கூட்டுப்புழுவில் இருந்து அந்துப்பூச்சி வெளிவரும் போது அதன் சிறகுகள் மிகவும் சிறியதாக இருக்கும். அதன் இறக்கைகளில்உள்ள கண் வடிவ புள்ளிகள் இவற்றை எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ளவும் குழப்பமடைய செய்யவும் பயன்படுகிறது. முதிர்பருவம் அடைந்தவுடன் அந்துப்பூச்சிகள் உணவு உட்கொள்ளாது. மேலும் இதற்கு உணவு உட்கொள்ள வாய்ப்பகுதியும் இல்லை. அதனால் ஒரு வாரம் மட்டுமே உயிர் வாழும். அச்சமயத்தில் தன இணையுடன் சேரும். பெண் அந்துப்பூச்சி சுமார் 200 முட்டைகள் வரை இலையின் அடிப்பாகத்தில் இடும். இவை 8 முதல் 13 நாட்களுக்கு அடைகாக்கப்படும். நல்ல தட்பவெப்பநிலையில் அந்துப்பூச்சிகள் அதிகமான முட்டைகளை இடும். ஆண் அந்துப்பூச்சிகளுக்கு பெண் அந்துப்பூச்சிகளை விட உணர்கொம்புகள் சற்று பெரியதாகவும் அகன்றதாகவும் இருக்கும். மேலும் லூனா அந்துப்பூச்சி தீங்கிழைக்கும் தீங்குயிரி அல்ல. பயிர்களுக்கு சேதம் விளைவிப்பது இல்லை.இவை அழிந்து வரும் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்றாலும் காண்பதற்கு அரிதாகவே இருக்கிறது.

 src=
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணப்படும் லூனா பூச்சிகள்

}

உயிரியில் வகைப்பாடு

  • திணை: விலங்கு
  • தொகுதி: கணுக்காலி
  • வகுப்பு: பூச்சி
  • வரிசை: Lepidoptera
  • குடும்பம்: Saturnidae
  • பேரினம்: Actias
  • இனம் : A. selene
  • இருசொற்பெயரீடு : Actias selene

வாழ்க்கை சுழற்சியின் படிமங்கள்

மேற்கோள்கள்

Arora, G.S. and Gupta I. J. 1979.Taxonomic studies on some of the Indian nonmulberry silkmoths (Lepidoptera : Saturniidae),Memoires of the Zoological Survey of India. Calcutta. Vol.16 (I).pp. 1–63. Kavane , R.P., and Sathe T.V..2014. Rearing technique for a wild silkworm Actias selene (Lepidoptera: Saturniidae). Biolife. 3(1).pp 1–6.

Kavane R. P 2015. Occurrence of natural food plants of Indian moon moth Actias selene (Hubner) silkworm from India. Biolife, 3(2), pp 496–498.

Rajadurai, S and Thangavelu. K., 1998. Biology of Moon Moth Actias selene Hubner (Lepidoptera : Satumiidae) present in Bhandara forest, Maharashtra. Proc. IIIrd Int. Conf. on wild silkmoth, pp. 362–366.

A Field Guide to Moths of Eastern North America, Special Publication 12, Virginia Museum of Natural History, 2005. 

^ "Luna Moth". Fcps.edu. Retrieved 2011-10-18.

^ "luna moth - Actias luna (Linnaeus)". Entnemdept.ufl.edu. 2010-08-19. Retrieved 2011-10-18. ^ "Map of Actias Luna - Discovery Life". a b "Species Detail: Luna moth – Actias luna (Linnaeus, 1758)". ^ "Species Detail: Largest and smallest butterfly and moth". ^ Luna Moth, Northern Virginia Ecology ^ National Geographic magazine, June 2016, page 20. Article by Catherine Zuckerman. Cited biologists: Jesse R. Barber (Boise State University) and Akito Y. Kawahara(Florida Museum of Natural History). 
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

லூனா அந்துப்பூச்சி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

லூனா அந்துப்பூச்சி (Actias selene). இது Saturnidae குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பட்டுப்புழு அந்துப்பூச்சியாகும். லூனா என்றால் நிலவையும், அதன் இறக்கைகளில் பிறை போன்ற பெரிய கண் வடிவ புள்ளிகள் உள்ளதாலும், மேலும் இவ்வகை அந்துப்பூச்சிகள் இரவில் மட்டுமே பறப்பதால் இவை Luna moth என்று அழைக்கப்படுகின்றன. காண்பதற்கு மிகவும் அரியதான இந்த அழகிய அந்துப்பூச்சி 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருப்புட்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் (காஞ்சிபுரம் மாவட்டம்) புங்க மரத்தில் இருந்தது மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

 src= Luna moth found in Kanchipuram district 01.jpg