புள்ளி லிசாங் புனுகுப் பூனை என்பது ஒரு புனுகுப் பூனை ஆகும். இது தென்கிழக்கு ஆசியா முழுக்கக் காணப்படுகிறது.என்றாலும் இதன் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என்று அறிவித்துள்ளது.[2]
இவற்றிற்கு மங்கிய நிறமும், அதில் கரும்புள்ளிகளும் கொண்டு இருக்கும். இந்த புள்ளிகள் உடல் முழுவதும் நீளப்பாங்காக வரிசையாக அமைந்திருக்கும். மேலும் நீள்வடிவ, மெல்லிய உடலும் குறுகிய கால்களும், நீள் கழுத்து கூர்மையான தலை, நீண்ட வால் கொண்டிருக்கும். வாலில் எட்டு முதல் பத்துவரை கருவளையங்கள் கொண்டிருக்கும். இவை நன்கு மரமேறவும், திறமையாக வேட்டையாடவும் வல்லது. இவை 0.45 கிலோ எடைகொண்டவை. இவை 14–15 அங்குளம் (36–38 செமீ) நீளம் கொண்டவை வால் நீளம் 12–13 அங்குளம் (30–33 செமீ). உயரம் 5–5.5 அங்குளம் (13–14 செமீ) கொண்டது.
இவை நேபாளம், சிக்கிம், அசாம், வங்காளம், பூட்டான் , வடகிழக்கு மியான்மார் , வடக்கு தாய்லாந்து, லாவோஸ் , வடக்கு வியட்நாம், மேற்கு சிச்சுவான் , யுன்னான், தென்மேற்கு குவாங்ஸி, தெற்கு சீனா போன்ற இடங்களில் காணப்படுகிறது.[3] இவை அரிதாக வடக்கு வங்காளத்தில் காணப்படுகின்றன.
இது பூச்சிகள், சிறிய விலங்குகள், பல்லிகள், பறவைகள், சிறிய பாலூட்டிகள் ஆகியவற்றை உணவாக கொள்கிறது.
புள்ளி லிசாங் புனுகுப் பூனை என்பது ஒரு புனுகுப் பூனை ஆகும். இது தென்கிழக்கு ஆசியா முழுக்கக் காணப்படுகிறது.என்றாலும் இதன் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என்று அறிவித்துள்ளது.