dcsimg

தவளை ( Tamil )

provided by wikipedia emerging languages

தவளைகள் நிலநீர் வாழிகள் வகுப்பைச் சேர்ந்த ஒரு வரிசையாகும். இவ்வரிசை அறிவியல் வகைப்பாட்டில் "வாலில்லா" என்று பொருள்படும் அனுரா (Anura) என்றழைக்கப்படுகிறது. முழுவளர்ச்சி அடந்த தவளைகளுக்கு நீண்ட பின்னங்கால்களும், திரண்டு உருண்ட உடலும், விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள கொய்யடி என்னும் பாதங்களும், புறத்தே பிதுங்கி இருக்கும் கண் முழிகளும், கொண்டு வாலில்லா ஓர் இருவாழ்வி விலங்கு. சிறு குட்டைகளிலும், குளங்களிலும் காணப்படுவன. தவளைகளில் ஏறத்தாழ 5000 வெவ்வேறு உள் இனங்கள் உள்ளன. தென் அமெரிக்காவைச் சேர்ந்த சில தவளைகள் மிகுந்த நஞ்சு உடையதாகவும் உள்ளன. சில வகைத் தவளைகள் கூடுகட்டும் திறன் பெற்றுள்ளன. அண்மையில் தென்னிந்தியாவில் கூடு கட்டும் அரியவகைத் தவளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[1].

 src=
கண்களுக்கு அருகே நஞ்சுச் சுரபிகள் உள்ள நச்சுத்தவளை. தென் அமெரிக்காவில் வாழ்கின்றது

நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்ட தவளைகளை மழைக்காலத்தின் பாடகர்கள் என்று அழைக்கிறார்கள்.[2]

காட்சியகம்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

தவளை: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

தவளைகள் நிலநீர் வாழிகள் வகுப்பைச் சேர்ந்த ஒரு வரிசையாகும். இவ்வரிசை அறிவியல் வகைப்பாட்டில் "வாலில்லா" என்று பொருள்படும் அனுரா (Anura) என்றழைக்கப்படுகிறது. முழுவளர்ச்சி அடந்த தவளைகளுக்கு நீண்ட பின்னங்கால்களும், திரண்டு உருண்ட உடலும், விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள கொய்யடி என்னும் பாதங்களும், புறத்தே பிதுங்கி இருக்கும் கண் முழிகளும், கொண்டு வாலில்லா ஓர் இருவாழ்வி விலங்கு. சிறு குட்டைகளிலும், குளங்களிலும் காணப்படுவன. தவளைகளில் ஏறத்தாழ 5000 வெவ்வேறு உள் இனங்கள் உள்ளன. தென் அமெரிக்காவைச் சேர்ந்த சில தவளைகள் மிகுந்த நஞ்சு உடையதாகவும் உள்ளன. சில வகைத் தவளைகள் கூடுகட்டும் திறன் பெற்றுள்ளன. அண்மையில் தென்னிந்தியாவில் கூடு கட்டும் அரியவகைத் தவளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 src= கண்களுக்கு அருகே நஞ்சுச் சுரபிகள் உள்ள நச்சுத்தவளை. தென் அமெரிக்காவில் வாழ்கின்றது

நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்ட தவளைகளை மழைக்காலத்தின் பாடகர்கள் என்று அழைக்கிறார்கள்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்