dcsimg

கினியா புல் ( Tamil )

provided by wikipedia emerging languages

கினியா புல் (Megathyrsus maximus) ஆப்பிரிக்கா, பாலஸ்தீன், ஏமன் நாடுகளைத் தாயகமாகக் கொண்ட, கால்நடைகளால் விரும்பி உண்ணக்கூடிய, பசுந்தீவனப் பயிராகும். இது விதைப்பு செய்தோ அல்லது வேர் விட்ட கரணைகள் ஊன்றியோ பயிரிடப்படுகிறது[1]. இப்புற்கள் மிகவும் தடிமனாகவும், பனிப்பொழிவைத் தாங்க முடியாததாகவும் உள்ளன[2] என்றாலும், இது வறட்சியை தாங்கி வளரக்கூடிய புல் வகையாகும்.

பயிரிடும் முறை

வடிகால் வசதியுள்ள அனைத்து நிலங்களிலும் கினியாப்புல் வளரும் என்றாலும், களிமண் பாங்கான நிலங்களிலும், தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களிலும் கினியா புல் நன்றாக வளராது[1]. கினியா புற்களை வளர்க்க ஏக்கருக்கு 20:20:60 கிலோ முறையே தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்களும், மேலுரமாக 10 கிலோ தழைச்சத்தும் இட வேண்டும். ஏக்கருக்கு விதையென்றால் ஒரு கிலோவும், வேர்க் கரணையென்றால் 20,640-ம் தேவைப்படுகிறது. விதைத்த உடன் முதல் தண்ணீர் மூன்றாம் நாளும், பின்னர் 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறையும் நீர்ப் பாய்ச்ச வேண்டும். 50 முதல் 55 நாட்களில் அறுவடை செய்யலாம்[3]. அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியில் செய்யலாம். ஒரு எக்டேர் நிலத்தில் 175 டன்கள் கினியா புல் பசுந்தீவனத்தை 5 அறுவடைகளில் பெறலாம்[1].

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "தீவன உற்பத்தி: கினியா புல்". தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம். பார்த்த நாள் 27 பெப்ரவரி 2016.
  2. "செம்மறியாடு மற்றும் முயல்களுக்கு பயனுடைய புல் மற்றும் தீவனப்பயிர்கள்". தமிழ் வெப்துனியா.கொம். 28 பிப்ரவரி 2016. http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-107051800035_1.htm. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016.
  3. த. தேவராஜ் (17 நவம்பர் 2011). "கறவை மாடு வைத்திருப்பவரே தீவனப் பயிர் வளர்க்கலாம்". தினமணி. http://www.dinamani.com/tamilnadu/article674568.ece?service=print. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கினியா புல்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

கினியா புல் (Megathyrsus maximus) ஆப்பிரிக்கா, பாலஸ்தீன், ஏமன் நாடுகளைத் தாயகமாகக் கொண்ட, கால்நடைகளால் விரும்பி உண்ணக்கூடிய, பசுந்தீவனப் பயிராகும். இது விதைப்பு செய்தோ அல்லது வேர் விட்ட கரணைகள் ஊன்றியோ பயிரிடப்படுகிறது. இப்புற்கள் மிகவும் தடிமனாகவும், பனிப்பொழிவைத் தாங்க முடியாததாகவும் உள்ளன என்றாலும், இது வறட்சியை தாங்கி வளரக்கூடிய புல் வகையாகும்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்