கார்வி குறிஞ்சி (Strobilanthes callosus) என்பது குறிஞ்சி பூச்செடிகளில் ஒரு வகையாகும். புதர்வகையைச் சார்ந்த இவை இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் சார்ந்த பகுதிகளில் காணப்படுகின்றன.[1] தமிழகக் குறிஞ்சி பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் என்றால் இவை எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக்கூடியவை. இதன் தரப்படுத்தப்பட்ட இந்தி மொழி பெயர் Maruadona (मरुआदोना) ஆகும்.[2] இவை மத்தியப் பிரதேசத்திலும் காணப்படுகின்றன. மராத்தியில் கார்வி என அழைக்கப்படுகிறது. இச்சொல்லே ஆங்கிலத்தில் பயன்படுகிறது.[3] அண்டை மாநிலமான கர்நாடகத்தில் கன்னட மொழியிலும் கர்வி (Karvi) என அறியப்படுகிறது.[3][4][5][6][7][8] சில நேரங்களில் Karvy என ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படுகிறது.[9][10]
இவை உயரமான செடிகளாகும். இவற்றில் சில 6-20 அடி உயரமும் 2 1/2 அங்குல விட்டமும் இருக்கும்.[7] இவை ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் பூக்கும். ஆனால் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே இது நிகழும்.
கார்வி குறிஞ்சி (Strobilanthes callosus) என்பது குறிஞ்சி பூச்செடிகளில் ஒரு வகையாகும். புதர்வகையைச் சார்ந்த இவை இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் சார்ந்த பகுதிகளில் காணப்படுகின்றன. தமிழகக் குறிஞ்சி பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் என்றால் இவை எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக்கூடியவை. இதன் தரப்படுத்தப்பட்ட இந்தி மொழி பெயர் Maruadona (मरुआदोना) ஆகும். இவை மத்தியப் பிரதேசத்திலும் காணப்படுகின்றன. மராத்தியில் கார்வி என அழைக்கப்படுகிறது. இச்சொல்லே ஆங்கிலத்தில் பயன்படுகிறது. அண்டை மாநிலமான கர்நாடகத்தில் கன்னட மொழியிலும் கர்வி (Karvi) என அறியப்படுகிறது. சில நேரங்களில் Karvy என ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படுகிறது.