dcsimg

போட்டிவிரிடீ ( Tamil )

provided by wikipedia emerging languages

போட்டிவிரிடீ (Potyviridae) என்பன செடிகொடிகளைத் தாக்கும் தீநுண்மங்கள். இவை வளையக்கூடிய இழைபோன்ற கோல்வடிவத் நுண்ணுருவ தீநுண்மங்கள் (flexuous filamentous rod-shaped particles). இவற்றின் மரபணுத் தொகுதியம் (genome) ஒற்றை ஆர்.என்.ஏ நேர்வகை ஆர்.என்.ஏ-க்களால் சூழப்பட்டவை. இவையும் காப்ஃசிட் (capsid) எனப்படும் ஒற்றை தீநுண்மத்தால் குறியூட்டிய (encoded) புரதத்தால் ஆன புற உறையால் சூழப்படவை. இவையெல்லாம் உருளை வடிவ புதைவுகள் (cylindrical inclusions) (‘pinwheels’ அல்லது முள்ளுருளி) எனப்படும் தீநுண்மப் புதைவுகளை ஏற்படுத்தத் தூண்டுகின்றன. இவை 70 கிலோடால்ட்டன் (kDa)அளவு கொண்ட, ஒற்றை தீநுண்ம மரபணு தொகுதியத்தியத்தில் இருந்து பெற்ற ஒற்றைப் புரதப் பொருளாகும்

 src=
சைட்டோமெகலோவைரசு என்பதில் உள்ள காப்ஃசிட் (capsid) எனப்படும் தீநுண்மப் புரத உறையைப் படத்தில் காணலாம். சிவப்பு நிறத்தில் கோடுகளாக காட்டப்பட்டுளவை மரபணுத் தொகுதியம். சூழ்ந்துள்ள உறை காப்ஃசிட்

மூடுபடலப் புரதத்தில் உள்ள அமினோக் காடிகளின் வரிசையைப் பொருத்து, போட்டிவிரிடீ குடும்பம் ஆறு பேரினங்களாக பகுக்கப்படுகின்றது. பைமோவைரசு என்னும் தீநுண்மம் தவிர மற்றவை எல்லாம் ஒற்றை இழை நுண்மங்கள். ஆறு பேரினங்களாவன:

போட்டிவிரிடீ குடும்பத்துள் பெரிய பேரினம்[1] போட்டிவைரசுகள் (போட்டி தீநுண்மங்கள்). இந்த பேரினத்தில் 100 உக்கும் கூடுதலானவை உள்ளன. இத்தீநுண்மங்கள் 720-850 நானோமீட்டர் நீளமுடையவை, இவை அபிடுகள் (aphids)வழி கடத்தப்படுகின்றன.

மக்ளராவைரசு என்னும் பேரினத்தில் உள்ள தீநுண்மங்கள் 650-675 நாமீ நீளம் கொண்டவை. இவையும் அபிடுகள் வழி கடத்தப்படுகின்றன.

ஐப்பொமோவைரசு என்னும் நீதுண்மம், வெள்ளை ஈ (whiteflies) என்பனவற்றால் கடத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் 750-950 நாமீ நீளம் உடையவை.

டிரைட்டிமோவைரசு (Tritimovirus), ரைமோவைரசு (Rymovirus) ஆகியவை 680-750 நாமீ நீளம் உடையவை. இவை எரியோஃவைடிட் மைட் உயிரினங்கள் (eriophydid mites) வழி கடத்தப்படுகின்றன.[2])

பைமோவைரசு (Bymovirus) மரபணு தொகுதியத்தில் இரண்டு நுண்மங்கள் உள்ளன (250, 550 நாமீ). இவை கைட்ரிட் காளான் (chytrid fungus)(Polymyxa graminis) வழி கடத்தப்படுகின்றன.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Description of Plant Viruses: Potyviridae family
  2. Description of Plant Viruses: Potyviridae family Figure

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

போட்டிவிரிடீ: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

போட்டிவிரிடீ (Potyviridae) என்பன செடிகொடிகளைத் தாக்கும் தீநுண்மங்கள். இவை வளையக்கூடிய இழைபோன்ற கோல்வடிவத் நுண்ணுருவ தீநுண்மங்கள் (flexuous filamentous rod-shaped particles). இவற்றின் மரபணுத் தொகுதியம் (genome) ஒற்றை ஆர்.என்.ஏ நேர்வகை ஆர்.என்.ஏ-க்களால் சூழப்பட்டவை. இவையும் காப்ஃசிட் (capsid) எனப்படும் ஒற்றை தீநுண்மத்தால் குறியூட்டிய (encoded) புரதத்தால் ஆன புற உறையால் சூழப்படவை. இவையெல்லாம் உருளை வடிவ புதைவுகள் (cylindrical inclusions) (‘pinwheels’ அல்லது முள்ளுருளி) எனப்படும் தீநுண்மப் புதைவுகளை ஏற்படுத்தத் தூண்டுகின்றன. இவை 70 கிலோடால்ட்டன் (kDa)அளவு கொண்ட, ஒற்றை தீநுண்ம மரபணு தொகுதியத்தியத்தில் இருந்து பெற்ற ஒற்றைப் புரதப் பொருளாகும்

 src= சைட்டோமெகலோவைரசு என்பதில் உள்ள காப்ஃசிட் (capsid) எனப்படும் தீநுண்மப் புரத உறையைப் படத்தில் காணலாம். சிவப்பு நிறத்தில் கோடுகளாக காட்டப்பட்டுளவை மரபணுத் தொகுதியம். சூழ்ந்துள்ள உறை காப்ஃசிட்

மூடுபடலப் புரதத்தில் உள்ள அமினோக் காடிகளின் வரிசையைப் பொருத்து, போட்டிவிரிடீ குடும்பம் ஆறு பேரினங்களாக பகுக்கப்படுகின்றது. பைமோவைரசு என்னும் தீநுண்மம் தவிர மற்றவை எல்லாம் ஒற்றை இழை நுண்மங்கள். ஆறு பேரினங்களாவன:

பேரினம் Potyvirus; மாதிரி இனம்: உருளைக்கிழங்கு தீநுண்மம் ஒய்(Potato virus Y) பேரினம் Rymovirus; மாதிரி இனம்: ரைகிராசு மொசெயிக் தீநுண்மம் (Ryegrass mosaic virus) பேரினம் Bymovirus; மாதிரி இனம்: பார்லி மஞ்சள் மொசெயிக் தீநுண்மம்(Barley yellow mosaic virus) பேரினம் Macluravirus; மாதிரி இனம்: மக்ளரா மொசெயிக் தீநுண்மம் (Mclura mosaic virus) பேரினம் Ipomovirus; மாதிரி இனம்: சக்கரைவள்ளிக் கிழங்கு புள்ளிநோய்த் தீநுண்மம் (Sweet potato mild mottle virus) பேரினம் Tritimovirus; மாதிரி இனம்: கோதுமை வரி மொசெயிக் தீநுண்மம் (Wheat streak mosaic virus)

போட்டிவிரிடீ குடும்பத்துள் பெரிய பேரினம் போட்டிவைரசுகள் (போட்டி தீநுண்மங்கள்). இந்த பேரினத்தில் 100 உக்கும் கூடுதலானவை உள்ளன. இத்தீநுண்மங்கள் 720-850 நானோமீட்டர் நீளமுடையவை, இவை அபிடுகள் (aphids)வழி கடத்தப்படுகின்றன.

மக்ளராவைரசு என்னும் பேரினத்தில் உள்ள தீநுண்மங்கள் 650-675 நாமீ நீளம் கொண்டவை. இவையும் அபிடுகள் வழி கடத்தப்படுகின்றன.

ஐப்பொமோவைரசு என்னும் நீதுண்மம், வெள்ளை ஈ (whiteflies) என்பனவற்றால் கடத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் 750-950 நாமீ நீளம் உடையவை.

டிரைட்டிமோவைரசு (Tritimovirus), ரைமோவைரசு (Rymovirus) ஆகியவை 680-750 நாமீ நீளம் உடையவை. இவை எரியோஃவைடிட் மைட் உயிரினங்கள் (eriophydid mites) வழி கடத்தப்படுகின்றன.)