dcsimg

இந்திய மரத் தவளை ( тамилски )

добавил wikipedia emerging languages

இந்திய மரத் தவளை[2] (Polypedates maculatus), இமயமலை மரத் தவளை [1] என்பது தெற்கு ஆசியாவில் காணப்படும் ஒரு பொதுவான மரத் தவளை வகை ஆகும். இதை 1830 இல் ஜான் எட்வர்ட் கிரே விவரித்தார்.

Polypedates maculatus.jpg

விளக்கம்

 src=
இலங்கையின் கண்டலமாவில்

இந்த தவளைகளானது சுமார் 7–8 செ.மீ. உடல் நீளம் கொண்டவை. இவை பெரும்பாலும் பழுப்பு, மஞ்சள், சாம்பல் அல்லது மேலே வெண்மையான நிறத்தைக் கொண்டவையாக இருக்கும். உடலில் புள்ளிகள் அல்லது திட்டுகளுடன் இருக்கும். மேலும் அரிதாக தலையின் பின்புறம் மற்றும் பின்புறத்தின் முன்புறத்தில் மணற்கடிகை வடிவ உருவத்துடன் இருக்கும். லோரல் மற்றும் கன்னப் பொட்டு எலும்புப் பகுதிகள் கருத்திருக்கும். மேல் உதட்டில் ஒரு மெல்லிய கோடு இருக்கும். தொடைகளின் பின்புறம் வட்டமான, மஞ்சள் புள்ளிகளைக் கொண்டிருக்கும், இவை பொதுவாக அடர்-பழுப்பு அல்லது ஊதா நிற வலைப்பின்னலால் பிரிக்கப்படுகின்றன. மேலே உள்ள தோல் மென்மையானது. கண்ணிலிருந்து தோள்பட்டை வரை ஒரு மடிப்பு நீண்டுள்ளது. ஆண் தவளைகளுக்கு உள் குரல் பைகள் உள்ளன. [3]

பரவல் மற்றும் சூழலியல்

இவை பூட்டான், இந்தியா, நேபாளம் , இலங்கை, மேற்கு மற்றும் தெற்கு வங்காளதேசம் முதல் சிட்டகாங் மாவட்டம் வரை பரவலாக உள்ளன; மேலும் இதன் எல்லைக்கு அருகிலுள்ள சீனா மற்றும் மியான்மரிலும் பரவி இருக்ககூடும். இந்த தவளை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக பட்டியலிட்டுள்ளது. [1]

அடிக்குறிப்புகள்

குறிப்புகள்

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages

இந்திய மரத் தவளை: Brief Summary ( тамилски )

добавил wikipedia emerging languages

இந்திய மரத் தவளை (Polypedates maculatus), இமயமலை மரத் தவளை என்பது தெற்கு ஆசியாவில் காணப்படும் ஒரு பொதுவான மரத் தவளை வகை ஆகும். இதை 1830 இல் ஜான் எட்வர்ட் கிரே விவரித்தார்.

Polypedates maculatus.jpg
лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages