dcsimg

வழை மரம் ( tamoul )

fourni par wikipedia emerging languages

வழை (Ochrocarpos longifolius) என்பது சுரபுன்னை மரத்தைக் குறிக்கும்.[1]

'கொங்கு முதிர் நறு வழை' எனக் குறிஞ்சிப்பாட்டு விளக்கம் தருகிறது. அதன்படி இந்தப் பூவில் மகரந்தப்பொடிகள் முதிர்ந்து கிடக்கும் காட்சியை இந்தப் படத்தில் கண்டு இன்புறலாம்.
வழைமரம் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்
  • ஆய் அண்டிரனின் குடிப்பூ வழை.[2]
  • குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று வழை.[3]
  • வையை ஆறு அடித்துக்கொண்டுவந்த மலர்களில் ஒன்று.[4]
  • நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் வழை வளரும்.[5]
  • கழை என்னும் பெருமூங்கில், ஆசினிப்பலா போன்ற மரங்களுடன் சேர்ந்து வளரும்.[6]
  • குமணன் ஆண்ட முதிரமலையில் கழை வளர்ந்திருந்த்து.[7]
  • தொண்டைநாட்டு மலைகளில் செழித்திருந்தது.[8]
  • யானை விரும்பும் தழைமரம்.[9]
  • மூங்கில் நெல் அரிசி போட்டுக் குறமகள் வழை வளர்ந்த மலைச்சாரல் மணக்கும்படி சோறு ஆக்கினாள்.[10]
  • வழை வளர்ந்த காடு நீர்வளம் மிக்கது ஆகையால் பாலைநிலமாக மாறுவதில்லை.[11]
  • வழைக்காட்டில் வருடை மான்களை மலைமக்கள் வளர்ப்பர்.[12]
பண்புப்பெயர்
வழைச்சு என்னும் சொல் ‘குழகுழத்’ தன்மையைக் குறிக்கும்.[13]

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்

வெளியிணைப்புகள்

வழை மலர்கள் படம் பி.எல்.சாமி முதலான அறிஞர்கள் காட்டுபவை.

அடிக்குறிப்பு

  1. ஆசிரியநிகண்டு நான்காவது மரப்பெயர்த் தொகுதி பாடல் 4
  2. வழைப்பூங்கண்ணி வாய்வாள் அண்டிரன் - புறநானூறு 131-2
  3. குறிஞ்சிப்பாட்டு 83
  4. பரிபாடல் 12-5
  5. வழையொடு வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பு - அகநானூறு 8-8
  6. கழை அமல் சிலம்பின் வழை தலை வாட - அகநானூறு 177-7
  7. கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி, ஆசினிக் கவினிய பலா - புறநானூறு 158-21
  8. தொண்டையர் வழை அமல் அடுக்கம் - குறுந்தொகை 260
  9. களிறு ... வழை அமல் வியன்காடு சிலம்பப் பிளிறும் - பதிற்றுப்பத்து 41-13
  10. கழைவளர் நெல்லின் அரி உலை ஏற்றி வழை அமல் சாரல் கமழத் துழைஇ - மலைபடுகடாம் 181
  11. வறன் உறல் அறியாத வழை அமல் நறுஞ்சாரல் - கலித்தொகை 53-1
  12. வழைவளர் சாரல் வருடை நன்மான் குழவி வளர்ப்பவர் பாலப் பாராட்டி - கலித்தொகை 50-21
  13. வல் வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த வெந்நீர் அரியல் - வழைச்சு – பெரும்பாணாற்றுப்படை 280
licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

வழை மரம்: Brief Summary ( tamoul )

fourni par wikipedia emerging languages

வழை (Ochrocarpos longifolius) என்பது சுரபுன்னை மரத்தைக் குறிக்கும்.

'கொங்கு முதிர் நறு வழை' எனக் குறிஞ்சிப்பாட்டு விளக்கம் தருகிறது. அதன்படி இந்தப் பூவில் மகரந்தப்பொடிகள் முதிர்ந்து கிடக்கும் காட்சியை இந்தப் படத்தில் கண்டு இன்புறலாம். வழைமரம் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள் ஆய் அண்டிரனின் குடிப்பூ வழை. குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று வழை. வையை ஆறு அடித்துக்கொண்டுவந்த மலர்களில் ஒன்று. நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் வழை வளரும். கழை என்னும் பெருமூங்கில், ஆசினிப்பலா போன்ற மரங்களுடன் சேர்ந்து வளரும். குமணன் ஆண்ட முதிரமலையில் கழை வளர்ந்திருந்த்து. தொண்டைநாட்டு மலைகளில் செழித்திருந்தது. யானை விரும்பும் தழைமரம். மூங்கில் நெல் அரிசி போட்டுக் குறமகள் வழை வளர்ந்த மலைச்சாரல் மணக்கும்படி சோறு ஆக்கினாள். வழை வளர்ந்த காடு நீர்வளம் மிக்கது ஆகையால் பாலைநிலமாக மாறுவதில்லை. வழைக்காட்டில் வருடை மான்களை மலைமக்கள் வளர்ப்பர். பண்புப்பெயர் வழைச்சு என்னும் சொல் ‘குழகுழத்’ தன்மையைக் குறிக்கும்.
licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்