dcsimg

அக்காரினா ( tamoul )

fourni par wikipedia emerging languages

அக்காரினா (Acarina அல்லது Acari ) என்பவை கணுக்காலிகள் தொகுதியைச் சேர்ந்த, சிலந்தி வகுப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ள உயிரின வரிசை ஆகும். இவ்வரிசையில் உண்ணிகளும் (ticks) சிற்றுண்ணிகளும் (mites) வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் பல விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றல் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. நாய் உண்ணியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம் சிரங்கை யுண்டாக்கும் சிரங்குண்ணியும்,கால்நடைகளுக்குச் செந்நீர்க் காய்ச்சலை (Red Water Fever) உண்டாக்கும் கால்நடையுண்ணியும் இவற்றில் அடங்கும்.[1] இவற்றில் 500000 சிறப்பினங்களுக்கு மேற்பட்ட சிற்றுண்ணிகளும் உண்ணிகளும் உலகெங்கும் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

பொதுப்பண்புகள்

இவற்றின் உடல் நீளம் 0.5 மி.மீட்டரிலிருந்து 30 மி.மீ வரை வேறுபடுகிறது. இளரிகளிலும் நிறைவுயிரிகளிலும் பொதுவாக 4 இணைக்கால்கள் உள்ளன. சில அக்காரிகளின் உடல்மேல் மயிர்களும் நுண்முட்டைகளும் உள்ளன. உண்ணிகளும், சிற்றுண்ணிகளும் உலகெங்கும் பல வகையான வாழிடங்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றன. எவரெஸ்ட்சிகரத்தில் 5000மீ உயரம் வரையிலும், பசுபிக் பெருங்கடலில் 5200 மீட்டர் ஆழம் வரையிலும் காணப்படுகின்றன.

அக்காரிகள் வாழ்க்கை முறை

அக்காரிகள் பொதுவாக 6 வளர்ச்சி நிலைகள் காணப்படுகின்றன.அவை

  • முட்டை
  • பின் முட்டை
  • இளவுயிரி
  • இளரி
  • பின் இளரி
  • நிறைவுயிரி

மேற்கோள்கள்

  1. "அக்காரினா". மிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 5. அணுகப்பட்டது 16 மார்ச் 2019.
  • அறிவியல் கலைக்களஞ்சியம்
licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

அக்காரினா: Brief Summary ( tamoul )

fourni par wikipedia emerging languages

அக்காரினா (Acarina அல்லது Acari ) என்பவை கணுக்காலிகள் தொகுதியைச் சேர்ந்த, சிலந்தி வகுப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ள உயிரின வரிசை ஆகும். இவ்வரிசையில் உண்ணிகளும் (ticks) சிற்றுண்ணிகளும் (mites) வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் பல விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றல் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. நாய் உண்ணியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம் சிரங்கை யுண்டாக்கும் சிரங்குண்ணியும்,கால்நடைகளுக்குச் செந்நீர்க் காய்ச்சலை (Red Water Fever) உண்டாக்கும் கால்நடையுண்ணியும் இவற்றில் அடங்கும். இவற்றில் 500000 சிறப்பினங்களுக்கு மேற்பட்ட சிற்றுண்ணிகளும் உண்ணிகளும் உலகெங்கும் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்