தாவரவியல் பெயர்:செபாஸ்டினியா பால்மெரி Sebastiania palmeri
குடும்பம்:யுபோர்பியேசியீ (Euphorbiaceae)
மெக்சிக்கோ குதிக்கும் காய்கள் (Mexican Jumping beans)
இது ஒரு குறு மரமாகும். இதிலிருந்து பால் வருகிறது. இப்பால் அதிக விஷத்தன்மை உடையது. இதனுடைய விதை மிகவும் பிரபலமானது. இதன் விதை அவரை விதைபோல் உள்ளது. இவ்விதையின் உள்ளே கார்போகேப்சா சால்டிடன்ஸ் என்கிற அந்துப் பூச்சியின் புழு வாழ்கிறது. விதையின் ஓடு சூடு ஏறும் போது விதையின் உள்ளே உள்ள புழுவிற்கு சூடு படுவதால் புழு சுருங்கி உடலை நீட்டுவதால் விதை குதித்து கொண்டு இருப்பதால் இவ்விதையை குதிக்கும் விதை என்கின்றனர். இப்படி வித்தியாசமான செயல் நடப்பதால் இவ்விதையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்ட். இதை விலை கொடுத்தும் வாங்குகிறார்கள். இதன் பூ பூக்கும் போது பூவில் அந்து பூச்சி முட்டையிடுகிறது. பிறகு காய் உண்டாகும்போது அதனுள்ளே புழுக்கள் உண்டாகிவிடும். இச்சாதியில் 75 இனங்கள் உள்ளன. ஆனால் இந்த இன விதைமட்டுமே குதிக்கிறது.
இது மெக்சிகோவில் வளர்கிறது.
| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001