dcsimg

சின்னத் தகைவிலான் ( tamili )

tarjonnut wikipedia emerging languages

சின்னத் தகைவிலான் எனும் Streak-throated Swallow தென் ஆசியா,இந்தியா,இலங்கை,ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத் தீவுகளில் காணப்படும் ஒரு சிற்றினம் ஆகும்.

பெயர்கள்

தமிழில் :சின்னத் தகைவிலான்

ஆங்கிலப்பெயர் :Streak-throated Swallow

அறிவியல் பெயர் : Petrochelidon fluvicola [2]

உடலமைப்பு

12 செ.மீ. - கரு நீல நிறமான உடலும் செம்பழுப்பான தலையும் பிடரியும் கொண்ட இதன் உடலின் கீழ்ப்பகுதி மங்கிய வெண்மை நிறமாக இருக்கும். தலையின் பக்கங்கள் மோவாய், தொண்டை, மார்பு ஆகியவற்றில் கருப்புக் கீற்றுகள் காணப்படும்.

காணப்படும் பகுதிகள் ,உணவு

வட தமிழ் நாட்டிலும் மேற்குத் தமிழ் நாட்டிலும் காணப்படும் இது கோயமுத்தூர் வரை காணப்பட்டதான குறிப்பு உள்ளது. கூட்டமாகப் பறக்கும் சிறு பூச்சிகளை இரை தேடித்திரியும் நீர்நிலைகளைச் சார்ந்து பிற தகைவிலான்களோடு திரியவும் காணலாம். குளிர்காலத்தில் காலை நேரத்தில் தந்தி மின்சாரக் கம்பிகளில் கூட்டமாக நெருக்கமாக உட்கார்ந்திருக்கும் திடீரென ஓர் ஆணைக்குக் கீழ்படிவது போல எல்லாமாக எழுந்து சிறு குழுக்களாகப் பிரிந்து இரை தேடப் புறப்படும். இதன் பறக்கும் வேகமும் மிதக்கும் ஆற்றலும் தகைவிலானது போல மிகுந்த வேகமும் மிதக்கும் ஆற்றலும் தகைவிலானது போல மிகுந்த வேகமும் திறனும் கொண்டதாக இராது. பறக்கும் போது டிர்ர் டிர்ர் எனக் குரல் கொடுக்கும். [3]

இனப்பெருக்கம்

தமிழ் நாட்டில் இனப்பெருக்கம் செய்வதான விவரங்கள் இன்னமும் தொகுக்கப்படவில்லை.

படங்கள்

மேற்கோள்கள்

  1. BirdLife International (2016). "Petrochelidon fluvicola". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2016: e.T22712458A94334424. http://dx.doi.org/10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22712458A94334424.en. பார்த்த நாள்: 1 May 2017.
  2. "[[[:en:Streak-throated swallow]] சின்னத் தகைவிலான்]". பார்த்த நாள் 5 நவம்பர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:106
lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages

சின்னத் தகைவிலான்: Brief Summary ( tamili )

tarjonnut wikipedia emerging languages

சின்னத் தகைவிலான் எனும் Streak-throated Swallow தென் ஆசியா,இந்தியா,இலங்கை,ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத் தீவுகளில் காணப்படும் ஒரு சிற்றினம் ஆகும்.

lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages