தாவரவியல் பெயர் :லூ பின்னல் ஆர்டிக்கஸ்(Lupinus arcticus)
குடும்பம்:லெகுமின்னோசேயீ (Leguminosae)
லூ பைன்
இச்செடி பனி கட்டி நிறைந்துள்ள (ஆர்க்டிக்) வடதுவருப்பகுதியில் வளர்கிற சிறியச்செடி ஆகும். துருவப்பகுதிகளில் உள்ள சிறு விலங்குகள் இதன் விதைகளை உண்ணுகிறது. இவ்விதையின் உறை மிகக் கடினமானது. உலகில் உள்ள விதைகளில் மிகவும் கெட்டியானதும், கடினமானதும் இவ்விதையே எனக் கருதப்படுகிறது. விதைகள் முளைப்பதற்கு ஓய்வு என்பது அவசியம். சில விதைகள் ஒரு சில நாட்களில் முளைக்கவேண்டும். சில பல மாதங்கள், பல வருடங்கள் கழித்து முளைக்கப்போட்டால் முளைக்கும். விதைகளில் முளைப்பு திறனைப் பொருத்த வரை அந்த லூபின்னஸ் விதைகள் மிகவும் ஆச்சரியப்படும் படி உள்ளது. கனடாவில் உறைபனியில் இருந்து எடுக்கப்பட்ட விதை முளைத்துள்ளது. இந்த விதையின் வயது 15,000 வருடம் ஆகிறது. 1967 ஆம் வருடம் வடதுருவப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட விறைத்து போன விதை 48 மணி நேரத்தில் முளைத்துள்ளது. இதன் வயது 10,000 வருடம் ஆகிறது. பனி உருகும்போது சரியான சூழ்நிலைக் கிடைத்தாலும் இவ்விதை உடனே முளைத்துவிடுகிறது. இச்சாதயில் 300 இனச்செடிகள் உள்ளன.
| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001